தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் தபால் வாக்குகளை திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த மையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொகுதிக்கு பிரித்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல்பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறுதேர்தல் நாளில் பணியில் ஈடுபடுவோர் வாக்களிக்க 2 வகையிலான வசதிகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதில் ஒன்று தபால் வாக்கு. அதன்படி, குடியிருக்கும் தொகுதியைவிட்டு, வெளி தொகுதியில் பணியமர்த்தப்பட உள்ளவர்கள் பயிற்சிக்கு செல்லும்போது, அவர்களிடம் படிவம் 12 வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படும்.அடுத்த கட்ட பயிற்சியின்போது தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு, அந்த படிவத்தில் அவர்கள்தங்கள் வாக்கை பதிவு செய்து, அங்குள்ள சேவை மையத்தில் உள்ள பெட்டியில் போட ேண்டும்.
மற்றொரு வசதி, தாங்கள் குடியிருக்கும் தொகுதியிலேயே உள்ளவாக்குச்சாவடியில் பணியமர்த்தப்படுவோர் 12-ஏ படிவம் மூலம், ‘இடிசி’எனப்படும் தேர்தல் பணிச் சான்றிதழ் பெற்று, தான் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே மின்னணுஇயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வதாகும்.
இதில், தபால் வாக்கு நடைமுறையை பொருத்தவரை, பயிற்சிமையங்களில் பெறப்படும் தபால்வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் தொகுதி வாரியாகபிரிக்கப்பட்டு, அவர் நியமிக்கும்அதிகாரி மூலம் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும்அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.