பதவி உயர்வு விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளரின் செயல்பாடுகளுக்கு உடன் அறிவுரை வழங்கிட வேண்டுகோள் ! - ஐபெட்டோ




பெறுவோர் 

 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
 தலைமைச் செயலகம் 
சென்னை-600009.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம்
 சென்னை-600009

 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அவர்கள் அரசுக்கு எதிராக ஆசிரியர்களின் உணர்வுகளை உச்சந்தொட வைக்கும் செயல்பாட்டில் தீவிரம் காட்டி வருகிறார்.

 ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வினை உச்ச நீதிமன்றத்தில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. விசாரணைக்கு வந்து தேதியினை ஒத்திவைத்து அறிவித்து வருகிறார்கள்.  

ஜூன் மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி முடிவு பெறும் நிலையில் உள்ளது.

 தமிழ்நாடு அரசின் சார்பாக பணி நியமனத்திற்கு TET தேர்ச்சியினை எடுத்துக் கொள்ளலாம். பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
 அரசாணைகளும் தெளிவாக உள்ளது.

 உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு செய்திருந்தது.

 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த கொள்கை முடிவினை உடன் திரும்ப பெற்றுக் கொள்வதாக துறைக்கு குறிப்பாணை தந்து வருகிறார்.

இந்தியப் பெருநாட்டில் இதுவரையில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வரலாற்றுப் பிழையினை ஏற்படுத்துகிறார்.

 சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

 TET தேர்ச்சி பெற்றிருந்தால் 12 ஆண்டு காலம் பணியில் சேர்ந்த  முன்னுரிமை உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு.

 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் மூத்தவராக இருப்பினும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.

 நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்கு பதவி முன்னுரிமை இந்திய ஆட்சிப் பணி உட்பட அனைத்து நிலையில் இருப்பவர்களுக்கும் பதவி உயர்வு பணியில் மூத்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 உச்சநீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமையினை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமென வழக்குத் தொடுத்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் உடன் தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள வழக்கினை திரும்பப்பெறும் முயற்சியினை தடை செய்து, நேர்முக குறிப்பாணை வழங்கிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

 பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பொறுப்பேற்ற காலந்தொட்டு ஆசிரியர்களுக்கு விரோதமான, பாதிப்பான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பதையும், உள்ளது உள்ளபடியே பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

என்றும் வரவேற்க வேண்டியதை வரவேற்று நன்றி பாராட்டுவதும் பார்வைக்குக் கொண்டு வருவதை தவறாமல் பதிவு செய்து வரும் கொள்கை உணர்வு கொண்டவர்கள்.

 இயக்கத்தின் மூத்த பொறுப்பாளர்..

வா.அண்ணாலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com*
தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com

Post a Comment

0 Comments