தபால் ஓட்டு செலுத்தும் முறை - வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை தேர்தல் பணியில் உள்ள நாம் 100% வாக்கைப் பதிவு செய்வோம்


*வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை தேர்தல் பணியில் உள்ள நாம் 100% வாக்கைப் பதிவு செய்வோம்.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
* இன்று 3வது தேர்தல் வகுப்பிற்குச் செல்லும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்*
💐💐💐💐💐💐💐💐
உங்களுக்கு ஓட்டு எந்த பாராளுமன்ற தொகுதியில் உள்ளதோ அதே பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் உங்களுக்கு Election duty certificate (EDC) வழங்கப்படும். அந்த EDC பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் . ஸ்கேன் செய்து செல்லில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேர்தல் நாள் அன்று உங்களிடம் உள்ள EDC யைக் கொடுத்துவிட்டு நீங்கள் பணிபுரியும் வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு எந்திரத்தில்(EVM) உங்கள் வாக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

யாருக்காவது EDC வழங்கவில்லை‌  என்றால் நாளையே சார்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரியை (வட்டாட்சியர் அலுவலகத்தில்) நேரில் சந்தித்து உங்கள் தேர்தல் பணி ஆணையைக் காட்டி உடனடியாக EDC பெற்றுக் கொள்ளவும்.

2.‌பிற தொகுதிகளில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். தபால் ஓட்டை அங்கேயே பதிவு செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி அங்கேயே உங்கள் வாக்குகளை பதிவு செய்யவும்.

3.பிற மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு உங்கள் இல்லத்திற்கு தபால் வாக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாக்குப் பதிவு முடிந்த உடன் கூட தபால் வாக்கை பதிவு செய்து கொள்ளலாம்.

*வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை தேர்தல் பணியில் உள்ள நாம் 100% வாக்கைப் பதிவு செய்வோம்.*

Post a Comment

0 Comments