தமிழகத்தில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் (தட்டச்சு), சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துகிறது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே அதிகமானோர் டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் ஆண்டு தோறும் இத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
சுருக்கெழுத்து உயர் வேக தேர்வு ஆக., 12, 13ம், இளநிலை, முதுநிலை தேர்வு ஆக.,19, 20ம், வணிகவியல் அக்கவுண்டன்சி இளநிலை, முதுநிலை தேர்வு ஆக., 21ம், டைப்ரைட்டிங் இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர் வேகம் ஆக., 26, 27, 28ம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை www.tndtegteonline.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் அக்., 27ல் வெளியாகும் என அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.