What app ல் ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை தேவைப்படும் இடங்களில் மொபைலில் PDF பைலாக காண்பித்தால் போதும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாட்ஸப்பிலே இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக https://www.digilocker.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்கள் கொடுத்து புதிய கணக்கு ஓபன் செய்ய வேண்டும்.

லாகின் ஆனவுடன் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களின் எண்களை வைத்து எளிய முறையில் பதிவேற்றம் செய்யலாம். இப்படி சேமித்த பிறகு மீண்டும் இத்தளத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. வாட்சப் மூலமாக எப்போது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யலாம். அந்த வகையில் +91-90131 51515 என்ற தொலைபேசி எண்ணை தங்களது மொபைல் போனில் பதிவு செய்துகொள்ள வேண்டும் 

அதில் menu என டைப் செய்த பிறகு வரும் செய்தியில் DigiLocker ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் Yes என்பதை கிளிக் செய்து தங்களது 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும். இதன்பின் தங்களுக்கு கிடைக்கும் OTPயை உள்ளிட்டு தேவையான ஆவணங்களை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர். இந்த வாட்சப் சேவையை பெற DigiLocker ல் ஆவணங்கள் பதிவேற்றம் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments