*நாள்: 02-01-2023*
*கிழமை: திங்கட்கிழமை*
_______________________________
கல்வி பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள்
https://justrelaxteach.blogspot.com
------------------------------------
*திருக்குறள்*
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்
குறள் : 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
பொருள்:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின் பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
*பழமொழி :*
Many hands make work light
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
*இரண்டொழுக்கப் பண்புகள் :*
1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.
2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.
*பொன்மொழி :*
"உங்கள் உள்ளுணர்வுக்குச் செவிசாயுங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அது உங்களுக்குச் சொல்லும்." --அந்தோனி ஜே. டி'ஏஞ்சலோ
*பொது அறிவு :*
1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது?
ஆர்க்டிக் என்னும் கடற்பறவை.
2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது ?
சொர்க்கப் பறவை.
*English words & meanings :*
English words:
1.Substantiate - establish -உறுதிப்படுத்து
2.Thriving - Successful - முன்னேற்றம்
ஆரோக்ய வாழ்வு :
குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டையில் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்ற அறிகுறிகளுடன் தொண்டை வலியும் சேர்ந்து வரும்.
பாக்டீரியா தொற்று மூலம் உண்டாகும் தொண்டை வலி ஸ்ரெப்ரோகோகஸ் கிருமியால் ஏற்படும் . காய்ச்சல் இருந்தபோதும் சளி மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதில்லை.
*NMMS Q*
DOCTOR என்பதை FMERQP எனவும், LAWYER என்பதை NYYWGP எனவும் குறித்தால் PLAYER என்பதன் குறியீடு __________. விடை: RJCWGP.
*நீதிக்கதை*
*பலம் எது? பலவீனம் எது ?*
ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமைபட்டுக் கொண்டே இருந்தது.
உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும், மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.
இப்படியிருக்க ஒரு மழைக்காலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப்படுத்தி அருகில் சென்றது.
மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதை நினைத்து நீ சந்தோஷப்பட்டிருக்கிறாயா என்றது. மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.
இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும், வலிமையும் இருக்கும். அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ, பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.
இறுதியில் தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.
*இன்றைய செய்திகள்*
*02.01.23*
* தமிழகத்தில் 34 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேருக்கு இணைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* இந்தியா, பாக்., இரு நாடுகளும் தங்கள் நாடுகளில் உள்ள அணு சக்தி நிலையங்கள் பொதுமக்கள் மற்றும் கைதிகள் குறித்த பட்டியலை நேற்று பரிமாறிக்கொண்டன.
* இந்தியாவின் முதல் எல்.என்.ஜி.,எரிவாயு லாரியான 'பி.இ., 5528 டிராக்டர்' என்ற லாரியை, 'ப்ளூ எனர்ஜி மோட்டார்ஸ்' நிறுவனம் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
* புதுடில்லி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசை குறைக்கும் வகையில், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலக்கரி எரிபொருள்களை பயன்படுத்துவதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
* டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட இந்தியாவின் ராம்குமார் தகுதி .
*Today's Headlines*
* 34 IAS officers have been promoted in Tamil Nadu. 8 of them have been promoted as Joint Secretary.
* India and Pakistan yesterday exchanged lists of civilians and prisoners at nuclear power plants in their countries.
* Blue Energy Motors has launched India's first LNG and LPG powered truck 'PE, 5528 Tractor'.
* In order to reduce pollution in New Delhi and nearby areas, a ban on the use of coal fuel in industries and commercial establishments has come into effect from yesterday.
* India's Ram Kumar qualifies to play in Tata Open Maharashtra Tennis Singles Main Round.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.