தொடங்கியது SSTA &TET ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் - குலுங்கியது DPI . அதிர்ந்தது அன்பழகன் வளாகம். 40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம்.

வேலைக்கு சம ஊதியம்:

   கடந்த 12 ஆண்டுகளாக 01.06.2009க்கு பின்பு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள் தன்னுடன் பணியாற்றும் 31.05.2009 க்கு முன்பு( அதாவது ஒரு நாளுக்கு முன்பு)  பணியேற்ற ஒரே பணியைச்செய்யும்  இடைநிலை ஆசிரியர்களை விட 3000 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்ட ஊதிய முரண்பாடு ,தற்போது  கிட்டத்தட்ட 15,000 ரூபாய் முரண்பட்ட குறைந்த  ஊதியம் பெறுகின்றனர். இதனை சரி செய்ய திரு. இராபர்ட் ஆசிரியர் தலைமையில் SSTA அமைப்பு TET ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 12 ஆண்டுகளாக வலிமைமிக்க தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் விளைவாக தற்போது திமுக அரசு தேர்தல் அறிக்கை 311 ல் சம ஊதியம் கோரும் 20000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை அதுபற்றி எந்தவித அறிவிப்பும் வெளியாக வில்லை. எனவே அறிவித்தபடி டிசம்பர் 27 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி இன்று 3 வது நாளை நெருங்கியுள்ளது.  

  கடும் வெயில்,  கடும் பனி க்கு இடையே இருபால் ஆசிரியர்கள் மிகுந்த மன உறுதியுடன் இந்த உண்ணா விரதத்தை தொடர்வது பலரை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக கைகுழந்தை, சிறுகுழந்தைகளுடன் பங்கேற்றுள்ள பெண் வீராங்கனைகளின் மன உறுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

   முதுகு தண்டுவட பிரச்சனை உள்ள மகளிர்,  அறுவைச்சிகிச்சை செய்துகொண்டோர்,  உடல்நலக்குறைவு உள்ள பெற்றோரை விட்டுவந்தவர்கள்,  கைக்குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து வந்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்தாலும்,  நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற புள்ளியில் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றைய சமூகத்திற்கு பெரிய எடுத்துக்காட்டு பாடமாகும். 

    இதுவரை 45 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலர் சோர்வடைந்து காணப்படுகின்ற காட்சி பார்ப்பவர் மனதை இரணமாக்குகிறது.  அரசு அழைத்துப்பேசி உடனே நிறைவேற்ற வேண்டும்  அல்லது உத்திரவாதம் வழங்க வேண்டும் என்ற உறுதி அனைவரது மனதிலும் கனலாய் கொதிப்பது களத்தில் நன்கு தெரிகிறது.  இது அரசை எதிரத்து நடக்கும்  போராட்டமல்ல,  கோரிக்கையையும் வாக்குறுதியையும் நினைவூட்டும் போராட்டம் என்ற கருத்தும் கூட்டத்தில் எதிரொலிப்பது ஆரோக்கியம்.  

   எனவே  சமூக நீதிக்கு பெயர் பெற்ற திமுக அரசும், மாண்புமிகு முதல்வரும் அழைத்துப்பேசி இந்த ஊதிய அநீதியைக்களைந்து உரிய சமூக நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் என்பது பலரது கருத்தாகும்.  

 போராட்ட களக்காட்சிகள் 

























    



Post a Comment

0 Comments