காசு இருப்பவனுக்கு மட்டுமே மருத்துவ கல்வி - நவீன தீண்டாமையின் வேறு வடிவம் நீட்

காசு இருப்பவனுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி!

நீட், தீண்டாமையின் வேறு புதிய வடிவம்.  எப்படி ?
 
2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
பாஸ் ஆனால் மருத்துவ சீட்டு என்பது உறுதி கிடையாது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 91,927 இடங்கள் மட்டுமே உள்ளன.

அனைத்து மாநிலங்களையும் சேர்த்து இந்தியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள்  312. 
அதில் உள்ள 48,012 இடங்களில் top-அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டும் நிரப்பப்படுவார்கள்.

தனியார் கல்லூரிகளிடம் உள்ள 43,915 இடங்களுக்கு மீதமுள்ள 9,45,057 பேரில், யாரிடம் ரொக்கம் அதிகம் இருக்கிறதோ, அவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படும்.

நீட் தேர்வு தேர்ச்சியில் முன்னணி மாநிலங்கள் எவை ?

உத்தரப்பிரதேசத்தில் 1,17,316 பேர். (கல்வி அறிவில் பின்தங்கிய மாநிலம்)

மகாராஷ்டிராவில் 1,13,812 பேர்.(கல்வி அறிவில் பின்தங்கிய மாநிலம்)

ராஜஸ்தானில் 82,548 பேர். (கல்வி அறிவில் பின்தங்கிய மாநிலம்)

தமிழ்நாட்டில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். (கல்வி அறிவில் முன்னேறிய மாநிலம்)

இந்தியாவிலேயே 70 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாட்டு கல்லூரிகள் வடமாநிலத்தவர் கைகளில் செல்கிறது வருடா வருடம் இப்படி.

சரி. சாதி அடிப்படையில் நீட் தேர்வின் மூலம் கல்லூரிகளில் சேர்பவர்கள் எப்படி? பார்ப்போம்;
SC - 26,087 பேர்.
ST – 10,565 பேர்.
OBC (BC,MBC) 74,747 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில்.

முன்னேறிய சாதியினர் மற்றும் முன்னேறிய சாதியில் உள்ள (வருடத்திற்கு 8 லட்சம் மட்டுமே சம்பாதிக்கும் அப்பாவி) ஏழைகள் [10% இட ஒதுக்கீடு] 8,81,402 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
 
இந்த முன்னேறிய சாதிகள்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பான்மையாக நுழைகிறார்கள் !  

இதுதான் பிற்போக்கு சக்திகள்  கண்ட கனவு. நீட் மூலம் முன்னேறிய சாதியினரின் கனவு நனவாயிருக்கிறது.

பெரும்பான்மை மக்கள்  என்ன செய்யப் போகிறார்கள் ?

Post a Comment

0 Comments