பிறப்பு ,இறப்பு சான்றிதழை online ல் பதிவிறக்கம் செய்யலாம்

   
        இந்தியாவில்  பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் விவரங்களை அரசிதழில் பதிவு செய்து பிறப்புச்சான்றிதழை பெற்றிருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  
அதேபோல் இறப்பினையும் பதிவு செய்து இறப்புச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.  

        குழந்தையின் ஆதார் பதிவு,  பள்ளியில் சேர்க்க, பணியில் சேர,   வெளிநாட்டுப்பயணத்திற்கான பாஸ்போர்ட் எடுக்க முதற்கொண்டு இறப்பிற்குப்பின சொத்து பிரிவினை வரை அனைத்திற்கும்  பிறப்பு  இறப்பு  சான்றிதழ்  அத்தியாவசியத் தேவையாகிறது.  

       நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து  பெற்றுக்கொள்ளும் இச்சான்றிதழ்  பேரிடர் காலங்களில்  சேதமடைவது,  தொலைந்து போவது  , தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்  செலுத்தாததால் உண்மை நகலை  கொடுக்க மறுப்பது  
போன்ற காரணங்களால் தவறிச்செல்கிறது.  

     கொரோனா காலங்களில்  உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்  ஏற்படலாம்  

      தற்போது  இச்சான்றிதழை online ல் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.  
    
  
பிறப்புச்சான்றிதழ் பெற
        பாலினம்,  மாவட்டம்  ,  பிறந்த தேதி,  பிறந்த இடம்  (வீடு/ மருத்துவமனை),  மருத்துவமனை  பெயர்  , மொபைல்எண்  , OTP உள்ளீடு செய்து பெறலாம் 

இறப்புச்சான்றிதழ் பெற
     பாலினம்,  மாவட்டம்  , பெயர்,  இறந்த தேதி,  இறந்த இடம்  (வீடு/ மருத்துவமனை),  மருத்துவமனை  பெயர்  , மொபைல்எண்  , OTP உள்ளீடு செய்து பெறலாம் 

Post a Comment

0 Comments