பதவி உயர்வு தவிர்த்து ஆசிரியர்களுக்கு அனைத்து கலந்தாய்வும் GO 243 ன் நடத்த அரசு முடிவு. ஆசிரியர்கள் அதிர்ச்சி. கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

பதவி உயர்வு தவிர்த்து ஆசிரியர்களுக்கு அனைத்து கலந்தாய்வும் GO 243 ன் நடத்த அரசு முடிவு. கலந்தாய்வு அட்டவணை வெளியீடு 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கிவிட்டு அதன் பின்பு காலியான இடங்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் .

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளால் சிக்கித் திணறும் பள்ளிக்கல்வித்துறையால் கலந்தாய்வை முறையாக நடத்த முடியாத சூழல் நிலை வந்தது.

 தற்போது   வழக்கு காரணமாக பதவி உயர்வு மட்டும்   புறந்தள்ளிவிட்டு தமிழகம் முழுவதும் அரசாணை 243 பயன்படுத்தி ஒட்டுமொத்த மாநில பணிமூப்பு  அடிப்படையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் , இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர்,  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , முதுநிலை ஆசிரியர்கள் என  அனைவருக்கும் தமிழக முழுவதும் ஒரே Seniority ஐ  பயன்படுத்தி GO.  243 படி கலந்தாய்வு  நடத்த அரசு முடிவு எடுத்துள்ளது.

 அதன்படி மே 15-ல் துவங்கும் இணையதள விண்ணப்பம் முதல் கலந்தாய்வு முடியும் ஜூன் மாதம் வரை நடைபெறும் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு இல்லாமல் 243 மூலம் கலந்தாய்வு  நடைபெறும் என்ற அரசின் இந்த முடிவு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Post a Comment

0 Comments