தினம் ஒரு கதை - முழுப் பூசணிக்காய்

 சின்ன வயசு பையன். ஊரில் வறுமை-

பசிக்கொடுமை. உண்பதற்கு ஒன்றும்

இல்லை. பக்கத்துவயலில் பூசணிக்காய்கள் மட்டும் நிறைய காய்த்துகிடந்தன.


இவனுக்கு வேறுவழியில்லை இரவோடு இரவாக பூசணிக்காய்களை பறித்து போய் பக்கத்து ஊர் சந்தையில் திருட்டு தனமாக விற்று வயிறு பசியாறிவந்தான்-

அதற்கும் வந்தது வேட்டு அவனை கையும் களவுமாக சந்தையிலே பிடித்துவிட அன்று முதல் அவனை "பூசணிக்காய் திருடன் " என்று பட்டம் கட்டி கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.


காலங்கள் உருண்டு ஓட அவன் வளர்ந்து பெரியவனாகவும் பணக்காரனாகவும்

ஆன போதும் அவனது பட்டப்பெயர் மட்டும் மாறவில்லை. அவன் வீட்டை அடையாளப் படுத்துபவர்கள் கூட "அந்த பூசணிக்காய் திருடன் வீடா? அதற்கு இந்த வழியாக போகவேண்டும்" என்றுதான் வழிகாட்டி அனுப்பி வைப்பார்கள்.


இப்படி பணம், ஆஸ்திகள் இருந்தும்

இந்த பூசணிக்காய் திருடன் பட்டம் மட்டும் மாறாது நினைத்து இருப்பது அவனுக்கு மிகுந்த மன உளச்சளை தந்தது.


அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.

அவரிடம் சென்று தன் மனக்குமுறலை

கொட்டித் தீர்த்தான்.


சாமியர் ஒரு உபாயம் சொன்னார்.


அவன் வீட்டில் ஆறுமாதத்திற்கு தொடர்ந்து

அன்னதானம் போடுமாறு சொன்னார்.


அவன் சோறு போடும் விஷயம்

ஊர் முழுக்க பரவியது. எந்த நேரம் அவன் வீட்டிற்கு போனாலும் சோறு கிடைக்கும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.


இப்போது இவர் வீட்டை விசாரிக்கும்

போது "அந்தச் சோறு போடுவாங்களே அந்த வீடுங்களா? என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது முழுப் பூசணிக்காய் (திருடன்) சோற்றில் மறைந்துவிட்டது.

Post a Comment

0 Comments