ஒரு விவசாயி தன் நிலத்தை இன்னொருவனுக்கு விற்றுவிட்டு வைரங்களை தேடி ஆப்பிரிக்காவுக்கு சென்றான்.
சில வருடங்களுக்குப் பிறகு அந்நிலம் முழுவதும் வைரங்களால் நிரம்பி இருந்ததை அதன் புதிய சொந்தக்காரன் கண்டுபிடித்தான்.
தன் சொந்த கால்களுக்கு கீழே ஒருபோதும் பார்க்காமல் அந்த வயதான விவசாயி செல்வத்தைத் தேடி வேறு எங்கோ சென்றிருக்கிறார்.
பிரச்சினை என்னவென்றால் பட்டை தீட்டப்படுவதற்கு முன்பாக வைரங்கள் உண்மையிலேயே வைரங்களைப் போல தோன்றாது. அவை வெறும் கற்களாகவும், சிறு சிறு பாறைகளாகவும் இருக்கும். அவற்றை வெட்டி அவற்றுக்கு வடிவம் கொடுத்து ,பளிச்சூட்டி அவற்றின் அழகையும் மதிப்பையும் வெளிக்கொணர வேண்டும்.
இதே வழியில் உங்களுடைய வைரங்கள்தான் உங்களுடைய மாபெரும் சாத்திய கூறுகள். அவையும் உங்கள் சொந்த கால்களுக்கு கீழே ஒளிந்து இருக்கக்கூடும். ஆனால் அவை கடின உழைப்பு எனும் மாறுவேடம் தரித்து வரும்.
முன்பு வைரங்கள் ஒருபோதும் வைரங்களாக தோன்றுவதில்லை. பலருடைய விஷயத்தில் வாய்ப்புகள் எப்போதும் கடின உழைப்பின் வடிவில் இருக்கும். நாம்தான் அதை வெளிக்கொணர வேண்டும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.