மனம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு புலனும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மனதில் அழுக்குகளை வைத்து கொண்டு வெளியே செய்கின்ற ஒப்பனைகள் வெறும் முகபூச்சாக குறுகிய காலம் மட்டுமே இருக்கும்..
நம் புன்னகை கூட போலியாக வெளி வேசமாக இருப்பதை சிறிது நேரத்தில் காட்டி கொடுத்து விடும் .
அதற்கு முதலில் நாம் நம் எண்ணைகளை சுத்தமாக்க வேண்டும். நாம் நல்லவற்றை சிந்திக்கும் போது,
''நம் கண்கள் நல்ல ஓவியங்களை பார்கிறது.
நம் காதுகள் நல்ல வார்த்தைகளை கேட்கிறது.அப்போது மனம் தானாகவே சுத்தமாகிவிடும்.''
முல்லா நசுருதீன் ஒரு கடைக்குச் சென்றார் அந்தக் கடையில் பலவிதமான வாசனைத் திரவியங்கள் வைக்கப் பட்டு இருந்தன.
அந்த கடையில் இருந்த விற்பனையாளர் முல்லாவிடம் ஒவ்வொரு திரவியமாக எடுத்து காட்டினார்.
இந்த திரவியத்தை நீங்கள் பூசினால் முகத்தில் இருக்கின்ற தூசுகள் எல்லாம் வந்து விடும் முகம் பளபளப்பாய் இருக்கும் என்று சொன்னார்.
வேறு ஒரு திரவியத்தை பூசினால் அழுக்குகள் எல்லாம் வெளியில் வந்துவிடும் என்று காட்டினார்.
இதையெல்லாம் நிதானமாக கேட்டுக் கொண்டிருந்த முல்லா,'' நான் இதுவரை இப்படி ஒரு கடையை பார்த்ததில்லை .
எனக்கு வயதாகி விட்டது. இனி முகத்தை பளபளப்பாக வைத்து என்ன செய்யப் போகிறேன்.
வெளியே இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வது போல , மனதின் உள்ளே இருக்கும் அழுக்குகளை துடைத்து மனதை சுத்தமாக வைக்க ஏதாவது வாசனை திரவியம் இருக்கிறதா? என்று கேட்கிறார் .
கடைக்காரர் முழிக்கின்றார்.,
இந்த கதை நகைச்சுவையாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்திக்க கூடிய கருத்தை சொல்லிச் செல்லுகிறது .
மனம் என்பது ஒரு குரங்கு போன்றது. அது சும்மாவே இருக்காது. குரங்கு போன்று தாவிக் கொண்டேதான் இருக்கும் .
நாம் தினமும் பாத்திரங்களை விளக்குகின்றோம் .
பல் விளக்குகின்றோம், அன்றாடம் ஆடைகளைத் துவைத்து அழுக்கை எடுக்கின்றோம்
வீட்டை அன்றாடம் சுத்தம் செய்கின்றோம். நாம் பார்க்கும் கண்ணாடியை தினமும் சுத்தம் செய்கின்றோம்.
மனதில் நெடுங் காலமாக ''மாசு என்னும் அழுக்கு'' ஏறி தடிப்பாக உள்ளது .அதை தூய்மை படுத்த வேண்டும். மனத்தை அடக்க தெரிந்தவனே மனிதன் .
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.