🌺டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு….
🌺உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது!
🌺மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
🌺நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
🌺1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்-ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர்
🌺ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர்.
🌺கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் -தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
🌺மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கம், அருணாச்சல், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல்
🌺100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.8 கோடி முதல்முறை வாக்காளர்கள், மக்களவை தேர்தலில் பங்கேற்க உள்ளனர் -தேர்தல் ஆணையர்
🌺சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
🌺வாக்காளர் பட்டியலில் சேர இன்றைய இளம்தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்களில் 85.3 லட்சம் பேர் பெண்கள் ஆவர் -தலைமைத் தேர்தல் ஆணையர்
ஏப்.1-ம் தேதி வரை 18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம் -தலைமைத் தேர்தல் ஆணையர்
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் -தலைமைத் தேர்தல் ஆணையர்
🌺18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு.
*🌺18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்*
முதற்கட்டம் - ஏப்ரல் 19;
2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 26;
3ம் கட்ட தேர்தல் - மே 7;
4ம் கட்ட தேர்தல் - மே 13;
5ம் கட்ட தேர்தல் - மே 20;
6ம் கட்ட தேர்தல் - மே 25;
7ம் கட்ட தேர்தல் - ஜுன் 1*
🌺மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.
🌺மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்-தலைமை தேர்தல் ஆணையர்.
🌺BREAKING: 7 கட்ட தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் - ராஜீவ்குமார்
🌺தமிழகத்தில் ஏப்.19ல் நாடாளுமன்ற தேர்தல்:
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27
வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28
திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு: ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4
🌺மக்களவை தேர்தல் பணி - வழிகாட்டு நெறிமுறைகள்
மக்களவை தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கை
தபால் வாக்கு சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்
வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும்
தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்
ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும்
🌺சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையர்.
ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும்.
தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது.
மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை.
முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும் -தலைமைத் தேர்தல் ஆணையர்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.