வாடகை வீட்டில் இருக்கீங்களா..? அப்படிஎன்றாலீஅப்படிஎன்றால்
- 80G வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வருமான வரிச் சலுகை பெறுவதற்கு இந்திய வருமான வரி சட்டத்தில் சிறப்பு பிரிவு உள்ளது. நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். பொதுவாக நிறுவனங்கள் , ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் HRA எனப்படும் HOUSE RENT ALLOWANCE சேர்ந்தே இருக்கும். உங்களது PAY SLIP இல் இந்த தகவல் இருக்கும். ஒருவேளை உங்கள் நிறுவனம், HRA வழங்குவதில்லை, என்றாலும் நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகைக்கு வரி விலக்கு கோர முடியும். அதற்கு வழிவகை செய்யும் 80GG பிரிவு குறித்து விரிவாக அறிந்து கொள்வோம்
80GG பிரிவில் வரி விலக்கு பெறுவது எப்படி?:
நிறுவனங்களில் பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் சுயதொழில் புரிவோருக்கு இந்த பிரிவு பொருந்தும். உங்கள் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் நீங்கள் இருந்தால் கூட இந்த பிரிவில் விலக்கு கோரலாம். ஆனால் பெற்றோரிடம் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி வாடகை செலுத்துவது கட்டாயம், அது பெற்றோரின் வருமான வரி கணக்கில் சேர்க்கப்படும்.
ஒரே நிதியாண்டில் 2 நிறுவனங்களில் பணி செய்திருந்தால்?:
நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களுக்கு அந்த நிதியாண்டு முழுவதும் HRA வழங்கவில்லையெனில் நீங்கள் தொழில் செய்யும் ஊரில் உங்களுக்கோ, உங்கள் மனைவிக்கோ, குழந்தைக்கோ சொந்தமான எந்த ஒரு குடியிருப்பும் இருக்க கூடாது. வாடகை செலுத்துவது தொடர்பாக படிவம் 10BAஐ சமர்பிக்க வேண்டும் உங்களது வாடகை தொகை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டினால் உங்கள் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட வேண்டும். ஒருவேளை அந்த நிதியாண்டில் முதல் 3 மாதங்கள் ஒரு நிறுவனத்தில் பணி செய்துள்ளீர்கள் அங்கே HRA வழங்கப்பட்டது, அதன் பின்னர் நீங்கள் வேறு நிறுவனத்தில் பணிக்கு சென்று அங்கே HRA வழங்கப்படவில்லை என்றாலும் நீங்கள் வரி விலக்கு பெற முடியாது. ஏனெனில் நிதியாண்டில் ஒரு மாதத்தில் கூட HRA பெற்றிருக்க கூடாது என்பதே நிபந்தனை.
படிவம் 10BA:
80ஜிஜி பிரிவில் வருமான வரிச் சலுகை பெறுவதற்கு படிவம் 10BA ஐ சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் குடியிருக்கும் இடம் உங்களுக்கு சொந்தமானது அல்ல என்பதை நிரூபிக்கும் சான்று இது.
1.வரி விலக்கு கோருபவரின் பெயர் மற்றும் பான் எண்
2. குடியிருக்கும் வீட்டின் முகவரி 3.வாடகைக்கு இருக்கும் காலம் மற்றும் வாடகைத் தொகை
4.வாடகை செலுத்தும் வழிமுறை(டிஜிட்டல், ரொக்கம் போன்றவை)
5.வீட்டு உரிமையாளரின் முகவரி, பெயர்
6. வாடகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால் உரிமையாளர் பான் எண்
இந்த படிவம் வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்.
சொந்த ஊரில் சொந்தமாக வீடு இருந்தால்..?
ஒருவேளை தமிழ்நாட்டில் உங்களுக்கு சொந்தமான வீடு இருக்கிறது. ஆனால் நீங்கள் டெல்லியில் வேலைக்கு செல்கிறீர்கள், அங்கே வாடகைக்கு வீடு எடுத்துள்ளீர்கள், உங்கள் நிறுவனம் HRA வழங்கவில்லை என்ற பட்சத்தில் நீங்கள் வரி விலக்கு கோர முடியும்.
எவ்வளவு வரி விலக்கு கிடைக்கும்?
1. மாதந்தோறும் ரூ.5,000 அதாவது ஆண்டுக்கு ரூ.60,000 2. மொத்த வருமானத்தில் 10% இருந்து வாடகை தொகை கழிப்பு 3. மொத்த வருமானத்தில் 25% உதாரணத்திற்கு சுரேஷ் என்பவரின் ஆண்டு வருமானம் (அனைத்து விலக்குகளும் போக) ரூ.5 லட்சம் வைத்து கொள்வோம். அவர் வாடகை வீட்டில் இருக்கிறார், அவர் வேலை செய்யும் நிறுவனம் HRA வழங்கவில்லை. அவர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை வாடகையாக செலுத்துகிறார் என்றால், நிபந்தனை 1இன் படி: ரூ.60,000 வரி விலக்கு நிபந்தனை 2இன் படி: செலுத்திய வாடகை ரூ. 1.5 லட்சம் -50,000 (மொத்த வருமானத்தில் 10%)= ரூ.1 லட்சம் நிபந்தனை 3இன் படி: மொத்த வருமானத்தில் 25% எனில் ரூ.1.25 லட்சம் இந்த மூன்றில் எது குறைவான தொகையோ அதை கணக்கிட்டு வருமான வரி விலக்கு வழங்கப்படும். எனவே நிபந்தனை 1இன் படி ரூ.60,000 வரி விலக்கு கிடைக்கும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.