JUST RELAX TEACH - வாசகர்களுக்கு இனிய குடியரசு தின வாழத்துகள். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவது ஏன்? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்


ஜனவரி 26 ஆம் தேதி ஏன் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் வரலாறு மற்றும் முக்கியதுவத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தைக் குறிக்கிறது.  இந்திய அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். 

இருப்பினும், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தான் இந்திய அரசியலமைப்பு முதன் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இப்படியாக நமது குடியரசு தினத்திற்கு பின்னால், அரசியல் அமைப்பு சபை, அண்ணல் அம்பேத்கர், இந்திய பிரிவினை, காங்கிரஸ் கட்சி மற்றும் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் என பல காரணங்கள் உள்ளன. அவைகளை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

News18

குடியரசு தினத்தின் வரலாறு:

அரசியல் அமைப்பு சபை என்பது இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு அதன் முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது, இதில் 9 பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நினைவூட்டும் வண்ணம், ஆரம்ப காலத்தில், சட்டமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு மற்றும் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, ஆகஸ்ட் 15, 1947ல், அந்த எண்ணிக்கை 299 ஆக குறைக்கப்பட்டது.

இந்த அரசியல் அமைப்பு சபைக்கு இந்திய அரசியலமைப்பை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. மேலும் அரசியல் அமைப்பின் ஆரம்ப பதிப்பை (வரைவு) உருவாக்கவே இவர்கள் 114 நாட்களுக்கு மேல் செலவழித்தனர். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான இந்த வரைவுக் குழு, அரசியல் நிர்ணய சபையின் 17க்கும் மேற்பட்ட குழுக்களில் ஒன்றாகும். இந்த வரைவுக் குழுவின் பிரதான பணி இந்தியாவிற்கான அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதே ஆகும்.

News18

இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கும் போதும் மற்றும் ஆலோசிக்கும் போதும், ​​கிட்டத்தட்ட 7,600 திருத்தங்களை முன்வைத்தது மற்றும் சுமார் 2,400 திருத்தங்களை நீக்கியது. இந்த அரசியல் அமைப்பு சபையின் கடைசி அமர்வு நவம்பர் 26, 1949 அன்று முடிவடைந்தது, அப்போது தான் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 26, 1950 இல் 284 உறுப்பினர்களின் கையொப்பத்தைத் தொடர்ந்து இது நடைமுறைக்கு வந்தது

Post a Comment

0 Comments