வாழும் போது தானம்... வாழ்க்கைக்குப் பிறகும் உறுப்புதானம் .... தந்து பலரது உயிரைக் காத்த ஆசிரியர் இன போராளி மதிப்புமிகு ஜான்பால். அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் கடந்த17.12.2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக  பணியாற்றிய திரு.ஜான்பால் என்பவர் தற்போது மாவட்ட மாறுதலில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள துவங்கப்பள்ளிக்கு பணிமாறுதலில்  சென்றார். 

   விதியின் சூழ்ச்சியால் கடந்த 04.12.2023 தேதி சாலையில் ஏற்பட்ட ஒரு கோர விபத்தில் தலையில் படுகாயமடைந்து நீண்ட போராட்டத்திற்கு பின் திருநெல்வேலி உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

கடந்த 11.12.2023 அன்று  அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்ட நிலையில் அவர் குடும்பத்தார்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். .அதன் அடிப்படையில் நேற்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.  TNPTFஆசிரியர்  சங்கத்தின் பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் பணியாளர்கள் அவர் உடலுக்கு மரியாதை செய்தனர்.

அதனைத்தொடர்ந்து அவரது  சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் ஊர்ப்பொதுமக்கள்,  நண்பர்கள்,  புதுக்கோட்டை,  மணமேல்குடி , திருநெல்வேலி ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு  இயக்க கொடியினை போற்றி வீரவணக்கம் செய்தனர்.  

இறுதி ஊர்வலத்தின் போது  பொதுமக்கள் வேதனையாக கூறியது " நல்லவர்களுக்கு காலம் இல்லை"  ஆம்  நல்லவர்களுக்கு காலம் இல்லைதான் ஆனால் அவர்களின் புகழும் நினைவும் பல காலங்களுக்கு வாழும்.  

தான் வீழ்ந்தாலும் தனது  உறுப்புகளின் மூலம்  பல உயிர்களுக்கு மறு வாழ்வு வழங்கியுள்ளார்.  

   வாழும்போதும்... வாழ்க்கைக்கு பிறகும் ...தானம் ,தர்மம் என்ற  கொள்கையை கொண்டுள்ள ஆசிரியர் ஜான்பால்  ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். 


Post a Comment

0 Comments