*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு*
*நாள்:12-12-2023*
*கிழமை: செவ்வாய்க்கிழமை*
*திருக்குறள்*
பால் :அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: இன்னாசெய்யாமை
*குறள் :318*
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
விளக்கம்:
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
*பழமொழி :*
Honesty is the best policy
நேர்மையே சிறந்த கொள்கை.
*ஈரொழுக்கப் பண்புகள் :*
1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .
*பொன்மொழி :*
நீண்ட நாள் வாழ்வதற்கு கதகதப்பான உடை அணியவும் மிதமாக உண்ணவும் நிறைய நீர் பருகவும் – இங்கிலாந்து
*பொது அறிவு :*
1. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி யார்?
விடை: கிரண் பேடி
2. ரப்பர், ஸ்டாம்பு, மை, தயாரிக்க பயன்படும் சேர்மம்
விடை: கிளிசரால்
*English words & meanings :*
overcome - win a victory over தடைகளைக் கடந்து வருதல். ovation - enthusiastic recognition மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்புதல்
*ஆரோக்கிய வாழ்வு :*
*ஆவாரம் பூ :*
வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது.
*நீதிக்கதை*
*தவறுக்குத் தண்டனை உண்டு*
குரங்கு ஒன்று மரக் கிளைகளில் தாவியபடியே ஏரிக்கரைக்கு வந்தது. ஏரிக்கரை ஓரம் இருந்த மா மரத்தில் தாவி விளையாடிக் கொண்டு இருந்தது. சற்று நேரம் மீன் பிடிப்பவர்கள், மீன் பிடிவலையுடன் வருவதைப் பார்த்தது. அவர்கள் கரைக்கு வந்ததும், தாங்கள் கொண்டு வந்திருந்த வலையை, ஏரியில் வீசினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வலையை கரைக்கு இழுத்தார்கள்.
வலையில் நிறைய மீன்கள் சிக்கி இருந்தன. வலையில் சிக்கிய மீன்களையெல்லாம் சேகரித்துக் கொண்டனர். மீண்டும் வலையை ஏரியில் வீசினார்கள். சிறிது நேரத்தில் மறுபடியும் சிக்கிய மீன்களை, கரைக்குக் கொண்டு வந்து சேகரித்தார்கள். இப்பொழுது மீனவர்கள் கொண்டு வந்த கூடை நிறைய மீன்கள் இருந்தன. இவை எல்லாவற்றையும் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது குரங்கு.
பிடித்த மீனை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள். அதற்கு முன்பாக மீன் பிடி வலையை ஏரிக் கரையோரம் வெயிலில் காயப் போட்டனர். பிறகு மீன்களை எடுத்துச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் குரங்குக்கு மீன் பிடிக்க ஆசை வந்து விட்டது. மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தது. மீன் வலையை எடுத்து ஏரியில் வீச முயன்றது. மீனவர்கள் வலையை வீசியதைப் பார்த்து குரங்கும் வீசியது. வலை ஏரியில் விழுகாமல், குரங்கு தலையில் விழுந்து சிக்கிக் கொண்டது. வலையில் இருந்து விடுபடப் போராடிப் பார்த்த குரங்கு, குதித்துத் தாவிய பொழுது ஏரிக்குள் விழுந்து விட்டது.
குரங்கு வலைக்குள் சிக்கிக் கொண்டதால், அதனால் தப்பிக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் வலை மேலும் சிக்கலாகியது. ஏரியில் தண்ணீரும் அதிகம் இருந்தபடியால், குரங்கினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே தண்ணீரில் தத்தளித்து மூழ்கி இறந்தது. பாவம் தவறு செய்ததற்குத் தண்டனை அனுபவித்தது.
நீதி: இது தவறு எனத் தெரிந்தே செய்பவர்கள் தண்டனை பெறுவது நிச்சயம். புகைப்பழக்கமும், போதைப் பழக்கமும் உள்ளவர்கள் தவறு எனத் தெரிந்தே செய்கிறார்கள். இதன் தீயபலனை இவர்கள் நிச்சயம் ஒருநாள் அனுபவிப்பார்கள்.
*இன்றைய செய்திகள்*
*12.12.2023*
*மிச்சாங் புயல் பாதிப்பு இதுவரை 17 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது; தமிழக அரசு.
*ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
*முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது.
இடுக்கி மாவட்டத்திற்கு எச்சரிக்கை.
*புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல் பொதுமக்கள் அச்சம்.
*இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி.
*Today's Headlines*
* Relief goods worth 17 crores have been provided so far for the rest of the storm damage; Tamil Nadu Govt.
* Chance of heavy rain in six districts.
*The water level of Mullai Periyar dam reached 136 feet. Alert for Idukki District.
*People fear the spread of corona again in Puducherry.
*Series vs England: Consolation win for Indian Women's team.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.