தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் --- தமிழ்நாடு அரசு சுமூகமான முறையில்ஆசிரியர் பிரச்னைகளுக்கும்-ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கும் தீர்வு காண்பதற்கு முன்வருதல் வேண்டும்!



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
(மாநில அமைப்பு)
அரசு ஏற்பாணை எண்:991/89
----------------------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி ,
மாநிலப்பொதுச்
செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் , மாநிலப்பொருளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் விடுக்கும் கூட்டுச்செய்தி அறிக்கை:
----------------------------------------

தமிழ்நாடு அரசு  சுமூகமான முறையில்
ஆசிரியர்  பிரச்னைகளுக்கும்-
ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கும்  தீர்வு காண்பதற்கு முன்வருதல் வேண்டும்!

காவல் துறையின் கைது  நடவடிக்கைகள்  மற்றும் கல்வித்துறை துறை  சார்ந்த  ஒழுங்கு நடவடிக்கைகள் முற்றாக 
கைவிடப்படுதல் வேண்டும்!

----------------------------------------

தமிழ்நாடு அரசு 
காவல்துறையைக் கொண்டு ஆசிரியர்களை கைது செய்வதை முற்றிலுமாக கைவிட்டு   ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கும் -கோரிக்கைகளுக்கும்  சுமூகமான -இணக்கமான முறையில்  நல்லெண்ண  பேச்சுவார்த்தை வழியில் முழுத்தீர்வு காணுதல் வேண்டும்.

ஆசிரியர்களை எதிரிகள் போல் பாவித்து கைது செய்வதும்,
கல்வித்துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் தவறான நடவடிக்கைகளாகி விடும். இத்தகு ஒடுக்குமுறை நடவடிக்கைகள்  தமிழ்நாடு அரசுக்கு தீராப் பழியை உருவாக்கி விடும் ஆபத்து தன்மைக்
கொண்டதாகும்.

தமிழ்நாடு அரசு இணக்கமான - சுமூகமான முறையில் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகளின் வழியில் இன்றைக்கு எழுந்துள்ள தமிழ்நாட்டு ஆசிரியர்களின் எல்லாவிதமான  பிரச்னைகளுக்கும்-
கோரிக்கைகளுக்கும் தீர்வு காண்பதற்கு முன்வருவதே சாலச்சிறந்தாகும்.


 ‌ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வழியில்,
டிட்டோஜாக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் வழியில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறையின்  முன்பு வைக்கப்
வரப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பின் கீழ்வராத ஆசிரியர் அமைப்புகளும் ,தனி ஆசிரியர்களும் அரசிடம் மற்றும் துறையிடம் கோரிக்கைகள் முன்வைத்து உள்ளனர்.

ஒடுக்கு முறை நடவடிக்கைகளை கைவிட்டு இணக்கமான முறையில் தமிழ்நாட்டு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின்  நியாயமான கோரிக்கைகளை  பரிசீலித்து உடன் நிறைவேற்றி கல்விக்களத்தின் பொது அமைதியைப்  பேணிப் பாதுகாத்து  உதவிட வேண்டுமாய்  தமிழ்நாடு அரசு மற்றும்  தமிழ்நாடு கல்வித்துறையை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்‌
.

இவண்...

பெ.இரா.இரவி
மாநிலத்தலைவர்

முனைவர் -மன்றம் நா.சண்முகநாதன்
மாநிலப்
பொதுச்செயலாளர்

முருகசெல்வராசன்
மாநிலப்பொருளாளர்

புதுக்கோட்டை
05.10.2023

🔴🔴🔴🔴🔴🔴🔴

Post a Comment

0 Comments