ஆசிரியர்கள் கைது -05.10.2023 பயிற்சி மையங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டம் - டிட்டோஜாக் தீர்மானம்


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 05.10.2023 காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.சேகர் அவர்கள் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி , நல்லதம்பி வீதியில் அமைந்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது . கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


 தீர்மானம் -1 

தங்களுடைய கோரிக்கைகளுக்காக சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் அமைதி வழியில் போராடி வந்த இடைநிலை ஆசிரியர்கள் , பகுதிநேர சிறப்பாசிரியர்கள் , பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை கைது செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிடடோஜேக் பேரமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது . கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட தமிழக அரசை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்m

தீர்மானம் -2 

டிட்டோஜேக்கின் 30 அம்சக் கோரிக்கைகளை விளக்கியும் , கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் , பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் , பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக முழுவதும் 05.10.2023 மாலை பயிற்சி மையத்தின் முன்பு கூட்டங்களை நடத்துவது என டிட்டோஜேக் பேரமைப்பு முடிவு செய்து அறிவிக்கிறது .


Post a Comment

0 Comments