பன்னீர்செல்வம் செய்யத்துணியாத, எடப்பாடியார் செய்யத்துணியாத செயலை திராவிட மாடல் முத்துவேல் கருணாநிதி செய்துள்ளார் . இது அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் ஒர் எச்சரிக்கை மணி!!!! விழித்துக்கொள் ஆசிரியர் இனமே !!!!

              கடந்த 01.06.2009 க்கு  முன்பும், பின்பும் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களிடையே மிகப்பெரிய ஊதிய முரண்பாடு உள்ளதை கண்டித்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெறும் கடுமையான பலகட்ட போராட்டங்களுக்கு மத்தியில்,  ஆட்சிக்கு  வந்தால் கட்டாயமாக சம வேலைக்கு சம ஊதியம்  வழங்குவோம் என்று திமுக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதி 311   நிறைவேற்ற கோரி கடந்த டிசம்பர் 2022 அன்று நடந்த தொடர் உண்ணாவிர போராட்டத்தின் இறுதியில் தமிழக அரசு 3நபர் குழு அமைத்து மூன்று மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. அரசாணை எண் 25. 

                    பத்து மாதங்களாகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை . எனவே உடனடியாக மூன்று நபர் குழு அறிக்கை அரசிடம் ஒப்படைத்து உடனடியாக புதிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது.  

பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த போதும்  அறவழியில் போராட்டம்  தொடரந்தது.  நேற்று கல்வி அமைச்சர்  மேலும் 3 மாதகாலம்  அவகாசம்  கேட்டார்.  அதற்கு  3 அல்ல  5 மாதகாலம்  அவகாசம்  எடுத்துக்கொள்ளுங்கள்  . ஆனால்  இந்த  தேதியில்  இருந்து நடைமுறைப்படுத்தப்படும்  என முதல்வர்  அறிவிப்பு ஆணை  வெளியிட்டவுடன்  உடனே  கலந்து சென்று  பயிற்சியில் கலந்து கொள்கிறோம் அதுவரை  போராட்டம் தொடரும் என்று  பொதுச்செயலாளர் அறிவித்தார்.  

 8 நாட்களாக கடும் மழையிலும், வெயிலிலும், உண்ணாமல், உறங்காமல் கடும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இந்த அரசு இன்று அதிகாலை தூங்கி எழுவதற்கு முன்பே கொடூரமான முறையில் ஆண் ,பெண் என்று பார்க்காமல் குழந்தைகள் என்றும்  பார்க்காமல் , தாய் தனியாக வேறு பேருந்திலும் ,குழந்தை தனியாக வேறு பேருந்திலும் ,தாய் தனியாக மண்டபத்திலும் , குழந்தை  தனியாக மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த.  

 கடந்த ஆட்சி காலங்களில் ஜெயலலிதா ,  பன்னீர்செல்வம் எடப்பாடியார் முதல்வராக இருந்த போது  இதே மாதிரியான கடும் உண்ணாவிர போராட்டம்  நடைபெற்ற பொழுதும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முடிந்தளவு சமாதானப்படுத்தி அனுப்பி தான் வைத்துள்ளார்கள் . இதுபோல் அராஜக செயல்களை ஈடுபட்டதில்லை ஆசிரியர் நலம்காக்கும் அரசு என்று போலி நாடகம் ஆடும் இந்த போலி திராவிட திமுக அரசு ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி கொடூரமான உங்கள் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது என SSTA பொதுச்செயலாளர் ராபர்ட் அவர்கள்  கண்டனம்  தெரிவித்துள்ளார்.  

Post a Comment

0 Comments