ஆதரவு தாருங்கள் தோழமை சங்கங்களே - இடைநிலை ஆசிரியர் இன வரலாற்றிலும் ஒரு இனப்படுகொலையாக சர்வதேச ஆசிரியர் தினமான அக்டோபர் 5 ,2023 மாறும்


சம வேலைக்கு சம ஊதியம் கைதை கண்டித்து இடைநிலை ஆசிரியர் இயக்கங்கள் பயிற்சி மற்றும் பள்ளியை புறக்கணிக்க வில்லை என்றால் அது இலங்கையில் மே 17 இல் நடந்த இனப்படுகொலை போல இடைநிலை ஆசிரியர் இன வரலாற்றிலும் ஒரு இனப்படுகொலையாக சர்வதேச ஆசிரியர் தினமான அக்டோபர் 5 ,2023 மாறும்


 அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்களுக்கும் வணக்கம்..


இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதில் எந்த தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை..


ஒரு இயக்கம் 1.6.2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கை 311 ல் சொன்ன படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 28 முதல் DPI வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது..


*உலகின் அத்தனை நாடுகளுக்கும் அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி வழியில் தன்னையே வருத்திக் கொள்ளும் இந்த உண்ணாவிரதத்தை 7 நாட்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. இடையில் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 இல் மிகப்பெரிய புகழஞ்சலியை செலுத்தினார்கள்*..


ஒவ்வொரு இயக்கமும் மெல்ல மெல்ல அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள் என்பதும் உண்மை..


*ஆனால் இந்த பிரச்சனை இப்பொழுது இயக்கப் பிரச்சினையில் இருந்து ஒரு இனப் பிரச்சினையாக மாறி இருக்கிறது*


நேற்று வரை ஏதோ ஒரு இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் பிரச்சனையாக இருக்கலாம்.. ஆனால் எப்பொழுது கைது நடவடிக்கை தொடங்கியதோ இது மொத்த இடைநிலை ஆசிரியர் இனத்திற்கும் விடப்பட்ட சவாலே..


*ஆக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் வெறும் கண்டனத்தோடு இல்லாமல் இன்று நடக்கும் பயிற்சி பள்ளியை புறக்கணித்தால் தான் வரும் காலத்தில் இவர்கள் தனித்தனியாக இருப்பார்கள் ஆனால் ஒரு பிரச்சனை என்றால் ஒன்று திரண்டு விடுவார்கள் என்கிற உளவியல் உண்மை அரசுக்கு புரியும்*


*இந்த ஒற்றுமை தான் எதிர்காலத்தில் எவ்வித கோரிக்கையையும் வென்றெடுக்க நமக்கு வழிகாட்டும்.. எந்த எல்லைக்கு போனாலும் இவர்களிடம் ஒற்றுமை இல்லை என்றால் யாருடைய கோரிக்கையும் நிறைவேறாது..*


பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் இனம் எல்லா இயக்கங்களிலும் இருக்கிறது..


*ஆகவே பேரியக்க தலைமைகள் இதை கனிவோடு பரிசீலனை செய்து ஒரு இனத்தை அழிப்பதற்கான கடைசி புள்ளியை இன்று வைத்து விட வேண்டாம்.. பயிற்சி, பள்ளியை அனைவரும் புறக்கணித்து இந்த இனத்தை இனத்தை வாழ வைப்பதற்கான முதல் புள்ளியை வைக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்*


இவ்வித நடவடிக்கை நம்முடைய ஒற்றுமையை காட்டி கோரிக்கைகளை வென்றெடுக்க ஓர் அணியில் திரண்டு விடுவார்கள் என்கிற அச்சத்தை ஏற்படுத்தட்டும்..


*பேரியக்கத் தலைமைகளே உங்களிடம் மன்றாடி கேட்கிறோம் அக்டோபர் 5 இன அழிப்பு நாளாக இருந்து விடக்கூடாது*

    நன்றி வணக்கம்

Post a Comment

0 Comments