விசுவாசம்
-----------
அவசரமாக அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தான் வினோத்.
மனைவி கௌரியும் எந்திரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.
இதற்கு முன் இப்படி அவசரமாக வினோத் கிளம்பியதில்லை.
எதுக்குங்க இவ்வளவு சீக்கிரமா கௌரி கேட்டாள்.
இன்னிக்கு புதுசா ஒரு பார்ட் டைம் வேலையில் சேர்ந்திருக்கிறேன். பேங்கில் பணம் எடுக்க வேண்டும். புது முதலாளி சீக்கிரம் வா என்றார்.
அதனால்தான் என்று சாப்பிட்டவாறே கூறினான்.
உங்கள் முதலாளிக்குத் தெரிந்தால் வருத்தப்பட மாட்டாரா? உங்கள் வேலையும் போய் விடாதா? சந்தேகத்துடன் கேட்டாள் கௌரி.
எத்தனை காலத்துக்கு தான் நல்ல மனிதர் என்று சம்பள உயர்வு இல்லாமல் வேலை பார்க்க முடியும்.
புது முதலாளியிடம் எல்லா விவரமும் சொல்லி இருக்கிறேன். அதிக சம்பளம் தந்து சீக்கிரமாகவே என்னை வேலைக்கு வைத்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்.
வெறும் சம்பள உயர்வு மட்டும் வைத்து பேசாதீர்கள்.
இந்த முதலாளி வாடகை தருகிறார் அவசரம் என்று கேட்டால் உடனே பணம் தருகிறார். நல்ல மதிப்பு மரியாதையும் உங்கள் மேல் வைத்திருக்கிறார்.
யோசித்துச் செய்யுங்கள் என்றாள் கௌரி.
இவரும் எல்லாம் தந்து கூடவே அதிக சம்பளம் தருவதாக சொல்லி இருக்கிறார்.
சில மாதங்களுக்குப் பின் வினோத் புது முதலாளியிடம் தன் பழைய முதலாளியை பற்றி புலம்பாத நாளில்லை.
ஏம்பா வினோத் உன் பழைய முதலாளியை பற்றி மாசக்கணத்தில் புலம்பறே. என்னிடமும் வேலைக்கு சேர மாட்டேன் என்கிறாய் .
என்னப்பா காரணம்.
மௌனம் காத்தான். அவனுக்கே புரியவில்லை.
வருடம் நகர்ந்த போதும் பார்ட் டைம் வேலையிலேயே இருந்தான் வினோத்.
புது முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
எனினும் கௌரிக்கு மட்டும் வினோத்தின் உள் மனதில் என்ன இருக்கின்றது என்பது எப்போதோ புரிய துவங்கிவிட்டது.
உங்களுக்கும் புரியவில்லை என்றால் தலைப்பை படித்து புரிந்து கொள்ளுங்கள்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.