பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் -05.09.2023


 *நாள்: 05-09-2023*
*கிழமை: செவ்வாய்க்கிழமை* 
 *திருக்குறள்*

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்

 *குறள் :254* 

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

விளக்கம்:

கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.

 *பழமொழி :* 

Calm before storm

புயலுக்கு முன் அமைதி.

 *ஈரொழுக்கப் பண்புகள் :* 

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

 *பொன்மொழி :* 

ஆசிரியரின் பெருமைகள் அனைத்தும் மாணவர்களிடமும், அவர் விதைத்த விதைகளின் வளர்ச்சியிலும் உள்ளன. – டிமிட்ரி மெண்டலீவ்

 *பொது அறிவு :* 

1.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

விடை: கங்கை

 *English words & meanings :* 

 Greffier - பதிவாளர் fricassee - பறவை அல்லது சிறு விலங்கின் சுவையூட்டப்பட்ட பொரித்த இறைச்சி

 *ஆரோக்கிய வாழ்வு :* 

 சோம்பு: சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா வறட்டு இருமல், மூக்குல நீர் வடியுறதெல்லாம் சரியாகும்.”

 *செப்டம்பர் 05* 

 *வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள்* 

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். ஆங்கிலேயர்களின் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. ஆங்கிலேய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார்.

 *இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்* 

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ( 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

 *நீதிக்கதை* 

ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள்  மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள தானியங்களை சாப்பிட்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வாழ்ந்தன. ஒருநாள் அந்த வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக கொழுத்த பூனை வந்து சேர்ந்தது. அதன் இஷ்டப்படி எலிகளை வேட்டையாடிக் கொன்று தின்றது.

எலிகள் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடின. வீட்டின் ஒரு மூலையில் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அவை கூட்டம் போட்டுத் தங்கள் குறைகளைக் கூறின.

வயதான எலி, பிள்ளைகளே, கவலைப்படாதீர்கள், இப்பொழுது நாம் இங்கு கூடியுள்ள, பொந்து (வளை) தான் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, முடிந்த வரை நாம் வெளியே செல்லாமல் இங்கேயே இருந்து விடுவோம் என ஆலோசனை வழங்கியது.

அத்திட்டம் நல்லதாக இருப்பதால், அதனை அனைத்து எலிகளும் ஏற்றுக் கொண்டன. எலிகள் யாவும் வளைக்குள்ளேயே இருந்தன. எலிகளின் நடமாட்டம் குறைந்ததால், பூனைக்கு இரை கிடைக்காமல் போனது.

எனவே மயங்கியது போல் நடித்தது. பூனை இறந்து விட்டது என நினைத்து, எலிகள் வெளியே நடமாட ஆரம்பிக்கும். அப்பொழுது எலிகளைப் பிடித்து விடலாம் என தனக்குள் கணக்குப் போட்டது.

மயங்கியது போல் நடித்த பூனை, அப்படியே தூங்கியும் விட்டது. எவ்வளவு நேரம் தூங்கியதோ பாவம், பசிக் களைப்பில் அதிக நேரம் தான் தூங்கி விட்டது.

அதிகப் பசியுடன் கண்விழித்துப் பார்த்தது. சற்று தூரத்தில் எலிகள் இஷ்டம் போல் விளையாடிக்கொண்டிருந்தன. 'ஆகா, எவ்வளவு தைரியமாக விளையாடுகின்றன. இவைகளை விட்டேனா பார், இன்று இவை நமக்கு நல்ல இரை தான்” என மகிழ்ந்து பூனை தாவிக் குதித்து ஓடியது.

திடீரென வந்த மணியோசையைக் கேட்ட எலிகள் தலை தெறிக்க ஓடித் தப்பியது. பூனைக்கும் ஒரே ஆச்சரியமாகி விட்டது. மீண்டும் ஓடியது மணியோசை எழுந்தது. இந்த மணியோசை எங்கிருந்து வந்ததென ஆராய்ச்சி செய்தது. பூனை தூங்கும் பொழுது அதன் கழுத்தில் மணியைக் கட்டி விட்டன கெட்டிக்கார எலிகள்.

நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. யானைக்கும் அடி சறுக்கும்.

 *இன்றைய செய்திகள்* 

 *05.09.2023* 

*40 செ.மீ. உயர்ந்து 40 செ.மீ. பறந்த விக்ரம் லேண்டர் -  இஸ்ரோ தகவல்.

*தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

* அணை பகுதிகளில் தொடர் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு.

*பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது நாளை வழங்கப்படுகிறது.

*அமெரிக்க ஓபன் டென்னிஸ் : டியாபோ, கோகோ காப்  காலிறுதிக்கு முன்னேற்றம்.

*மூன்றாவது டி20 போட்டி - 74 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி.

 *Today's Headlines* 

*40 cm.  40 cm high.  Vikram Lander flew - ISRO information.

 * Chance of rain for five days in Tamil Nadu 9 districts including Tiruvallur will receive heavy rain.

 * Continuous rain in dam areas: Chervalar dam water level rises by 11 feet in a single day.

 * 386 people will be given Best Teacher Award tomorrow by the Department of Education.

 *US Open Tennis: Diabo, Coco Cope advance to quarterfinals.

 *3rd T20I - New Zealand win by 74 runs.

Post a Comment

0 Comments