JUST RELAX TEACH ன் 3,00,000 வாசகர்களுக்கு இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்

💐"ஒரு நாட்டின் தலையெழுத்து வகுப்பில் நினைக்கப்படுகிறது" என்ற வரிகளுக்கு ஏற்ப சமுதாயத்தில் சிறந்த குடிமக்களை உருவாக்குபவர் ஆசிரியரே. 💐"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்ற பழமொழிகளுக்கு ஏற்ப தன்னை மாணவர்களுக்காகவே அர்ப்பணித்துக் கொள்பவர் ஆசிரியரே. 💐"முயன்றால் முடியாதது இல்லை; முயற்சி திருவினையாக்கும்." என்ற வாசகத்தின் மூலம் மாணவர்கள் இடையே தன்னம்பிக்கை வளர்ப்பவர்கள் ஆசிரியர்களே.
💐"குழந்தைகளின் உடல் வடிவை அளிப்பவர் பெற்றோர்; உள்ளத்தை வடிவமைப்பவர் ஆசிரியர்; 
குழந்தைகளுக்கு இதயத்தை கொடுங்கள்"  என்கிறார் சாக்ரடீஸ்.
என்ற வரிகளுக்கு ஏற்ப மாணவர்களிடம் அன்பை செலுத்தி அவர்களை நல்வழிப் படுத்துபவர்கள் ஆசிரியர்களே.
💐அகரத்தை கற்பிப்பவர்!
💐ஆண்டவனுக்கு ஈடானவர்!  
💐இன்பத்தைத் தருபவர்!
 💐ஈடில்லா உழைப்பை தருபவர்! 💐உண்மையை உரைப்பவர் ! 
💐ஊக்கத்தைத் தருபவர் !
💐 எண்ணங்களுக்கு வண்ணம்  அளிப்பவர்!
💐 ஏணியாய் விளங்குபவர்! 
💐ஐயங்களை போக்குபவர்!
💐 ஒற்றுமையை வளர்ப்பவர்!
💐ஓதுவதை உயிரென கொண்டவர் !
💐ஒளவை வழி நடப்பவர்! 
💐அஃதே ஆசிரியராவர்.
💐 எழுச்சிமிக்க பாரதம் உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். 💐💐

Post a Comment

0 Comments