*♻️சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.*
*♻️அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்..*
*♻️ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.*
*♻️அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.*
*அதற்கு அந்தப் பறவை,*
*♻️""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.*
*♻️அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.*
*தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு,*
*♻️அந்த மனிதனைப் பார்த்து,"மனிதனே, நீயும் தேடு...*
*மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது. கதையைச் சொல்லி முடித்த மகான்,*
*♻️"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமை தான் கிட்டும்'' என்றார்.*
*♻️''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''*
*♻️சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ!*
*😎ஆம்,நண்பர்களே.,*
*🏵️ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல் தான். சோம்பலாலால் கால தாமதம் நேர்கிறது.கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது.*
*⚽எனவே.,சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்...*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.