பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.08.2023



 *நாள்: 28-08-2023*
*கிழமை: திங்கட்கிழமை* 


 *திருக்குறள்*

 பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை

 *குறள் :227* 

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

விளக்கம்:

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

 *பழமொழி :* 

All this fair in love and war

ஆபத்துக்கு பாவமில்லை

 *ஈரொழுக்கப் பண்புகள் :* 

1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 

2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை

 *பொன்மொழி :* 

வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் ஒரு நண்பருடன் நடப்பது சிறந்தது. --ஹெலன் கெல்லர்

 *பொது அறிவு :* 

1. முதல் இந்திய பெண் விண்வெளி வீரர் யார்?

விடை: கல்பனா சாவ்லா

2. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிப்பவர் யார்?
விடை: ஜனாதிபதி

 *English words & meanings :* 

 Excelled - the best சிறந்து விளங்கியது
Gathered - assemble திரட்டுதல், கூடுதல்

 *ஆரோக்கிய வாழ்வு :* 

சோம்பை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது.

 *நீதிக்கதை* 

 *கர்வம் வேண்டாம்* 

அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்த

 கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள். இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான் மிகவும் வலிமையானவன், மண்ணையே துளைத்து வளை அமைத்துவிடுவேன். என்னை யாறாலும் ஒன்றும் செய்யமுடியாது. பாம்பைக்கூட விரட்டியடித்து விடுவேன்' என்று வீண் பெருமை பேசும். ஒருநாள் எலியும், குதிரையும் கொஞ்சம் தூரத்தில் சென்று மேய்ந்து வர முடிவு செய்தன. இரண்டும் பேசிக்கொண்டு நடந்தன. அப்போது, 'நான்தான் உன்னை வழி நடத்தி செல்வேன். நான் சண்டையில் அவனை வீழ்த்தியிருக்கிறேன். இவனை வீழ்த்தியிருக்கிறேன்' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே முன் சென்றது எலி. திடீரென்று எலி நின்றது. 'ஏன் நின்றுவிட்டாய்? தொடர்ந்து செல்' என்றது குதிரை. 'உனக்கு கண் சரியாக தெரியாதா? எதிரே பார் ஆறு ஓடுகிறது, எப்படி கடப்பது?' என்று கேட்டது எலி. 'அது ஆறா? சிறிய கால்வாய் தானே இது. எளிதாக கடந்துவிடலாம்' என்றது குதிரை, 'குதிரையே இது கால்வாயா? எனக்கு ஆறுபோல்தான் தெரிகிறது. இறங்கினால் நிச்சயம் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். நாம் இரண்டு பேரும் மூழ்கிவிடுவோம்' என்றது எலி. குதிரை எலியின் பேச்சை கண்டுகொள்ளாமல் கால்வாயில் இறங்கியது. "ஏய் எலியே, என் முழங்கால் அளவு கூட வெள்ளம் இல்லை. இதையை நீ ஆறு என்கிறாய், உடனே இறங்கி வா என்றது குதிரை, 'நண்பா உனக்கு வேண்டுமானால், இது குறைந்த தண்ணீராக இருக்கலாம். ஆனால் என் உருவத்திற்கு இது நதிபோல வெள்ளப்பெருக்கு தான். தயவு செய்து என்னை உன் முதுகில் ஏற்றி அக்கரையில் விடு, நான் என்னைப் பற்றி கர்வத்துடன் பேசியதை மறந்துவிடு" என்று மன்னிப்புக் கேட்டு அடங்கியது எலி, 'அப்படிவா, வழிக்கு, இனியும் வீண் பெருமை பேசி வாழாதே' என்று எலியை, தன் முதுகில் ஏற்றி அக்கரையில் விட்டது குதிரை. இரண்டும் கர்வமின்றி நண்பர்களாக வாழ்ந்தன.

 *இன்றைய செய்திகள்* 

 *28.08.2023* 

 # சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது அறிவிப்பு - தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு.

# பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவரின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்க சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

# சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை செப்டம்டர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

# சூதாட்ட விளம்பரங்களைத் தவிர்க்க ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு ஆணை

Post a Comment

0 Comments