வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, AIS APP வடிவமைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, AIS APP வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களின் அனைத்து TDS கிரெடிட்கள், வட்டி வருமானம், ஈவுத்தொகை, பங்குகள்/மியூச்சுவல் ஃபண்டுகள் வாங்குதல்கள் மற்றும் கணக்கில் காட்ட வேண்டிய பிற பரிவர்த்தனைகள் அனைத்தையும் இந்த APP இல் பார்க்கலாம் -

அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!

வரி செலுத்துவோர் தங்கள் டிடிஎஸ்/டிசிஎஸ் (TDS/TCS), வட்டி, டிவிடெண்ட், பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் மற்றும் வருமான வரியை திரும்பப் பெறுதல் (Tax Returns) போன்ற அனைத்து தகவல்களையும் இந்த செயலியின் மூலம் இனி எளிதாக அறிந்து கொள்ளலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.


 தரவிறக்கம் செய்ய இணைப்பு (For the convenient of Income tax payers, AIS APP has been designed. You can see all your TDS credits, Interest income, dividends, shares/Mutual Funds purchases and any other reportable transactions in this APP - Download Link)...👇👇👇


இந்த செயலியைப் (APP) பெறுவது எப்படி?

1. AIS for Taxpayers செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

2. பின்னர் பயனர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
3. இதற்கு பான் கார்டு எண்ணை பயனர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு பயனர்கள் இதில் தங்களை ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
4. அதனைத் தொடர்ந்து பயனர்கள் 4 டிஜிட் கொண்ட ரகசிய எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பின் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம். இதனை ஏஐஎஸ் வலைதளத்திலும் பயன்படுத்த முடியும்.
5. Google Play Store மற்றும் App Store இல் இது இலவசமாகவே கிடைக்கிறது.

Post a Comment

0 Comments