TANCET 2023 தேர்வு ஒத்திவைப்பு, புது தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்!


அண்ணா பலக்லைக்கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் டான்செட் எனும் தமிழ்நாடு பொது நுழைவுதேர்வு (TANCET) தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. M.B.A., M.C.A., M.E. , M. Tech. , M. Arch. , M. Plan ஆகிய முதுநிலை பட்டபடிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் இந்த படிப்புகளை படிக்கலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் டான்செட் 2023 தேர்வு, 2023 பிப்ரவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக M.E. , M. Tech. , M. Arch. , M. Plan ஆகியவற்றிற்கான தேர்வுகள் பிப்ரவரி 25ஆம் தேதியும், M.B.A வுக்கு பிப்ரவரி 26ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திடீரென்று தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தங்களது இணையதளத்திலிருந்து தேர்வுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளை நீக்கியுள்ளது. மேலும், மாற்று தேதிகள் மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதிகளை பற்றி அப்டேட் பெறுவதற்கு தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளதை https://tancet.annauniv.edu/tancet/index.html தொடர்ந்து பின்பற்றி கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments