தேர்வுநிலை, சிறப்பு நிலை விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டியவை - அறந்தாங்கி DEEO செய்தி

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்வு நிலை ,சிறப்பு நிலை வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அப்பொழுது வெளியிடப்பட்ட செய்தி .

     ஆனால் தற்போது இந்த அதிகாரம் வட்டார கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த இணைப்பில் கொடுத்துள்ளபடி வட்டார கல்வி அலுவலரின் பரிந்துரை கடிதம் தேவையில்லை.  மற்ற அனைத்து இணைப்புகளையும் இணைத்து வட்டாரக் கல்வி  அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
     மேலும் அனைத்து கல்வி சான்றிதழ்களையும் உண்மைத்தன்மை கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உண்மை தன்மை சான்று பெற பலர் தற்போது தான் விண்ணப்பித்து உள்ளனர் . எனவே TET உண்மைத் தன்மை சான்று வந்த பின்பு தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

Post a Comment

0 Comments