அரசு ஊழியர்கள் , ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசின் வாக்குறுதியை நினைவூட்டி , நிறைவேற்ற கோரி தொடர் போராட்டங்கள் அறிவிப்பு .

ஆட்சியில் திமுக அரசு :


        தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தியபோது தொடர்ந்து ஆதரவு வழங்கியதோடு மட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தனது கட்சி தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் முக்கிய இடத்தைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுக அரசு ஆட்சிக்கட்டிலில் ஏறி அமர வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் முழு ஒத்துழைப்பு வழங்கினர் . அதன் விளைவாக திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.


வாக்குறுதிகள் :


    ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வெளியிட்டார். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை சற்று காலதாமதமாக வழங்கினார்.


மாநில மாநாடு :


        அத்துடன் அரசூழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறிவிட்டதாக நினைத்து மற்ற கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது. ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் நிதிநிலை சரியானதும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என ஒரே வாரத்தையில் மாநாட்டை முடித்து வைத்தார். அந்த நிகழ்வே அனைவரையும் சோர்வில் தள்ளியது.

தளராத சில சங்கங்கள் :

        அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர் கால இடைவெளியில் போராட்டம் நடத்தியது. SSTA ஒருநாள் நினைவூட்டல் கூட்டம் நடத்தியது. பின்னர் ஜாக்டோ ஜியோவிலிருந்து விலகிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது .எதற்கும் தமிழக அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை. தற்போது STFI அமைப்பு சார்ந்த இயக்கங்கள் தொடர்ச்சியாக பல கட்ட பல வடிவ போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது .





அகவிலைப்படி தாமதம்:


    2 ஆண்டு கால ஆட்சி நெருங்கும் நேரத்திலும் அரசூழியர்களின் முக்கிய கோரிக்கைகளான புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தல், சரண்டர் ஒப்படைப்பு இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கைகள் பற்றி எந்த ஒரு சமிஞ்கைகளும் வராத நிலையில், தற்போது 01.07.2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை இதுவரை அறிவிக்காத நிலையில் அரசூழியர் ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை தற்போது துவங்கியுள்ளன .


சம வேலைக்கு சம ஊதியம்:



        கடந்த 12 ஆண்டுகளாக 2009க்கு பின்பு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள் தன்னுடன் பணியாற்றும் 2009 க்கு முன்பு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களை விட கிட்டத்தட்ட 15,000 ரூபாய் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இதனை சரி செய்ய SSTA அமைப்பு TET ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 12 ஆண்டுகளாக வலிமைமிக்க தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் விளைவாக தற்போது திமுக அரசு தேர்தல் அறிக்கைகள் சம ஊதியம் கோரும் 20000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை அதுபற்றி எந்தவித அறிவிப்பும் வெளியாக வில்லை. எனவே எதிர்வரும் டிசம்பர் 27 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.


பல சங்கங்களின் போராட்ட அறிவிப்பு :



    இதனை தொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சங்கம் அவசரமான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது.


    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரும் 28 ம்தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.


    தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர் போராட்டத்துடன் பட்ஜெட் சமயத்தில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து உள்ளது.

 


    எதிர்வரும் பட்ஜெட் தமிழக அரசுக்கு நெருக்கடிகொடுக்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் தமிழக முதல்வர் அனைத்து சங்கங்களையும் அழைத்துபேசி போராட்டங்களையும் முடிவு கொண்டு வருவார் எனஅனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப் படுகிறது .



- Article by --  JUST RELAX TEACH.





Post a Comment

0 Comments