தினம் ஒரு கதை - உங்கள் இலக்கை அடைவதற்கு பயணம் செய்யுங்கள்

*சிந்தனை கதை :::---* 
                ஒரு காட்டில் சிறிய வயதில் ஒன்றும் அறியாத வழி தவறிய ஒரு மிருகம் *குள்ளநரி* கூட்டத்தில் சிக்கி கொண்டது. அந்த 
 *குள்ளநரிக்கூட்டம்* ஒன்று சேர்ந்து இவனை நாம் நமக்கு வேலை செய்யும் அடிமையாக வைத்துகொள்ள வேண்டும் என்று கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தது. பின்னர் வழி தவறிய அந்த மிருகத்திடம் நியும் எங்களை போன்று ஒரு *நரிதான்* என்று சொல்லி அதை நம்ப வைத்தது. அந்த வழி தவறிய அந்த மிருகமும் *குள்ளநரி கூட்டம்* சொல்லும் வேலை எல்லாம் செய்து வந்தது... இந்த வழி தவறிய மிருகத்தின் உழைப்பால் *குள்ளநரி* கூட்டம் உழைக்காமல் உண்டு கழித்து வந்தது..

அந்த வழி தவறி வந்த மிருகம் வளர்ந்தது. அதற்கு சுயமாக யோசிக்கும் தன்மை வந்தது.... இந்த *குள்ளநரியின்* உருவமும் நாமும் வேறுபட்டு உள்ளோம் என்று சிந்திக்க ஆரம்பித்தது... அந்த கூட்டத்திடம் கேட்டது நான் யார் ஏன் உங்களை போல  இல்லாமல் வேறுபட்டு இருக்கிறேன் என்று கேட்டது...

ஆனால், அந்த *நரிக்கூட்டம்* இவனுக்கு உண்மை தெரிந்தால் நமக்கு ஆபத்து என்று அறிந்து ஒட்டு மொத்த *குள்ளநரிகளும்* ஒன்றாக சேர்ந்து நீ எங்களை போன்ற *நரிதான்* என்று நம்ப வைக்க முயற்சி செய்தது. ஆனால் வழி தவறி வந்த மிருகத்திற்கு சந்தேகம் குறையவில்லை... இவர்கள் அனைவரும் நம்மை வைத்து ஏன் உண்டு கழித்து சந்தோசமாக இருக்கிறார்கள் என்று சிந்தை ஓடிக்கொண்டு இருந்தது. அது அந்த *குள்ளநரிகளை* விட்டு வெகு தூரம் சென்று தனிமையில் ஆழ்ந்து யோசித்து கொண்டு இருந்தது..... 

அப்போது அந்த வழியாக வந்த மனிதன் ஒருவன் இந்த மிருகத்தை பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தான். அந்த மிருகத்திற்கு ஒரே குழப்பம் நம்மை பார்த்து ஏன் இவன் ஓடுகிறான் என்று யோசித்து அவனை துரத்தி சென்றது...

அந்த மனிதனை துரத்தி பிடித்து பயப்பட வேண்டாம். எனக்கு ஒரு சந்தேகம் அதனால் தான் உங்களை துரத்தி பிடித்தேன் என்றது... என்ன சந்தேகம் என்று மனிதன் கேட்டான். என்னை பார்த்து ஏன் நீங்கள் பயந்து ஓட்டம் பிடித்தீர் என்று கேட்டது. 

அதற்கு மனிதன் அந்த மிருகத்தை பார்த்து என்ன கேள்வி இது காட்டின் ராஜாவான உங்களை பார்த்து எப்படி ஓடாமல் இருக்க முடியும். நான் ஓடாமல் இருந்தால் என்னை கொன்று தின்று தீர்த்து இருப்பீர் என்று சொன்னான்.... 

அந்த மனிதன் சொன்ன பிறகுதான் தான் ஒரு சிங்கம் என்று தான் ஒரு அரசன் என்றும் உணர்ந்தது.... 

 தான் யார் என்று உணர்த்திய அவனுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தது.... 

இப்போது அந்த சிங்கத்திற்கு நன்கு புரிந்தது. நம்மை யோசிக்க விடாமல் நானும் *நரிதான்* என்று என்னை நம்ப வைத்து நம்மால் அந்த *குள்ளநரி* கூட்டமே வாழ்ந்து வந்ததை எண்ணி மனம் வேதனை அடைந்தது. அந்த கூட்டத்தை நோக்கி சென்று ஒரு கர்ஜனை செய்ததும் அங்கே இருந்த அனைத்தும் இவனுக்கு உண்மை தெரிந்து விட்டது. இனியும் இவனோடு இருந்தால் நமக்கு ஆபத்து என்று சொல்லி ஓட்டம் எடுத்தது.

 *பொருள்* :-
               இந்த வழி தவறிய சிங்கம் போல நாமும் நம்மை சுற்றி உள்ள *குள்ளநரி* போன்ற சில கெட்ட எண்ணம் கொண்ட மனித கூட்டத்தில் சிக்கி நம்மை நாமே அறியாமல், நம் திறமை என்ன என்று உணராமல், நாம் செல்ல வேண்டிய இலக்கு என்ன என்பதை மறந்து காணாமல் போய் விடுகிறோம்.... சிங்கம் போல நம்மை நாமே உணர்ந்து செயல்பட வேண்டும். நம்மை சுற்றியுள்ள போலியான உறவுகளிலிருந்து மீண்டு உங்கள் இலக்கை அடைவதற்கு பயணம் செய்யுங்கள் ...... 

Post a Comment

0 Comments