ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு உண்மைத்தன்மை பெறவேண்டுமா? என்ற குழப்பம் தீராத பட்சத்தில் , TNTET சான்றிதழுக்கு உண்மைத்தன்மை விண்ணப்பிக்க APPLICATION PDF download. - ATQ

தமிழக அரசு பள்ளிகளில்  முதன்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு(TNTET)  மூலம் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு  டிசம்பர் மாதத்துடன்  10 ஆண்டுகள்  நிறைவடைந்து தேர்வு நிலை பெற இருப்பதால்,  தற்போது  அதற்காக TNTET தேர்ச்சி சான்றிதழுக்கான உண்மைத்தன்மை அறிய வேண்டுமா?  என முதல்வர் தனிப்பிரிவு க்கு  கேட்கப்பட்ட கேள்விக்கு.  ஆம் என பதில் வந்துள்ளது.  

     அதனைத் தொடர்ந்து  பல சங்க நிர்வாகிகளும், மூத்த  ஆசிரியர்களும்  ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது  பட்டப்படிப்பு அல்ல அது ஒரு போட்டித்தேர்வு எனவே  TET தேர்வுக்கு உண்மைத்தன்மை  பெறவேண்டும்
 என்பது கட்டாயமில்லை.  அனுபவம் இல்லாத   மற்றும்  விதிகள் தெரியாத அலுவலர்கள் TET க்கு  உண்மைத்தன்மை  பெறவேண்டும் என அறிவுறுத்தி பதில் அனுப்புகின்றனர்.  அப்படி எனில் TNPSC , UPSC,  SLET,  NET,  PGTRB தேர்வுகளில் தேர்ச்சி பெற்று  பணியில் இருப்பவர்கள் தங்களது  தகுதித்தேர்வுக்கு உண்மைத்தன்மை பெற எந்த கட்டாயமும் இல்லாத பட்சத்தில் TET தேர்வுக்கு மட்டும் ஏன் உண்மைத்தன்மை  பெற கட்டாயப்படுத்த வேண்டும் ? என்ற கேள்வியும் நியாயமானதுதான்.  

         ஆனால் தெளிவான எந்த  அறிவிப்பும் இல்லாத பட்சத்தில்,  அடுத்த மாதம்  தேர்வுநிலை பெற இருக்கும் TET ஆசிரியர்கள் , தேர்வுநிலைக்கு விண்ணப்பிக்க TET சான்றிதழுக்கு உண்மைத்தன்மை வேண்டுமா ? வேண்டாமா?  என்ற  குழப்பத்தில் உள்ளனர்.  ஆயினும் உண்மைத்தன்மைக்கு  விண்ணப்பித்து விடலாம் என்ற  முடிவில்  இருப்பவர்கள்  கீழ்க்கண்ட pdf விண்ணப்பத்தினை  பதிவிறக்கம் செய்து  விண்ணப்பிக்கலாம்.  

TNTET GENINUE APPLICATION ---- DOWNLOAD PDF ------ https://drive.google.com/file/d/10Ut-Z2MlVlxwFiV_nc-sty96-ztYrv6C/view?usp=sharing


#TNTET

#TET GENIUSES 

#TET 

Post a Comment

0 Comments