கலைத் திருவிழா 2022-2023அறந்தாங்கி ஒன்றியம் - போட்டி நிகழ்ச்சி நிரல்

போட்டி நடைபெறும் இடம்: 
அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி அறந்தாங்கி.
நாள்: 29.11.2022
நேரம்: முற்பகல் 10:00 மணி
*நிகழ்ச்சி தொடக்க விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், அறந்தாங்கி  சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
💐💐💐💐💐💐💐💐
🖋️*பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்களை பள்ளிக் கல்வித் துறை EMIS இணைய தளத்தில் winner 🏆1,2,3 என மூன்று இடங்களை பதிவு செய்ய வேண்டும்.
📌 பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் 🏆 பிடித்த மாணவர்/குழுவினர் மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற முடியும் (EMIS இணைய தள பதிவில் உள்ளபடி).
📌தனி நபர்/ குழு போட்டிகளில் ஒரு போட்டியாளர் மட்டுமே இருப்பின் அவரே முதலிடம் 🏆 பிடித்தவர் என EMIS இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
📌EMIS இணைய தள பதிவில் உள்ளபடி முதலிடம் 🏆 பிடித்த மாணவர்/ குழு உறுப்பினருக்கு பதிலியாக வேறு மாணவர்களை களமிறக்கக் கூடாது.
📌போட்டி நடைபெறும் நாட்களில் மாணவர்களை காலை 10:00 மணிக்குள் போட்டி நடைபெறும் பள்ளிக்கு அழைத்து வருதல் மற்றும் போட்டி முடிவுற்ற பின் கூட்டிச் செல்லுதல் உரிய பள்ளியின் பொறுப்பு.
📌போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்களே மதிய உணவு ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
📌போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு  தேவைக்கேற்ப A4 sheet மட்டுமே(கட்டுரை, கையெழுத்து, ஓவியம் போன்ற போட்டிகள்) வழங்கப்படும், மற்ற போட்டிக்கு தேவையான கருவிகள் மற்றும் பொருட்களை அந்தந்தப் பள்ளிகளே கொண்டு வரவேண்டும்.
📌மாணவர்கள் பொது இடங்களில் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க ஆசிரியர்கள் உதவிட வேண்டும்.
📌போட்டி நடைபெறும் பள்ளியில் கழிவறைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
📌போட்டி சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது.
இவண்...

🏆 கலைத் திருவிழா உறுப்பினர்கள் அறந்தாங்கி ஒன்றியம்🥇🖋️...

Post a Comment

0 Comments