தினம் ஒரு தகவல் - யுரேகா யுரேகா!!!


யுரேகா, யுரேகா என சொன்னவர் யார் தெரியுமா?- ஏன் சொன்னார்..

ஆர்கிமிடிஸ்    என்பவர்    கிரேக்க நாட்டைச் சேர்ந்த  ஒரு  கணித  மேதை;  இவர் வாழ்ந்த  காலம் கி.பி.287-212  ஆகும்.  ஆர்கிமிடிஸ்  தமது  கோட்பாடுகளை   நிரூபிப்பதற்கு, உரிய   சோதனைகளை நடத்திப்  பார்ப்பதில்  பெரும்  நம்பிக்கை கொண்டிருந்தார்.   அவர் கண்டுபிடித்த  ஆர்கிமிடியன்  திருகாணி தொழில் நுட்பம் நீரேற்றும்   பயன்பாட்டிற்கு  உரியதாக  இன்றும்  வேளாண் பாசனத்  துறையில்  விளங்கி  வருகிறது. நெம்புகோல்கள் மற்றும்  கப்பிகள் (pulleys) பயன்பாட்டிற்கு உரிய விதிகளை,  ஆர்கிமிடிஸ்தான்  அறிவியல்  உலகிற்கு  அளித்தார். ஆர்கிமிடிசின்  வாழ்க்கையில்  நடந்ததாகக்  கூற்ப்படும்  ஒரு  நிகழ்வு   இன்றும் அறிவியல்   உலகில்   நினைவு  கூறப்படுவதாக  விளங்கி  வருகிறது.  குளியலறையில் நிர்வாணமாகக்  குளித்துக்  கொண்டிருந்த நிலையில்,  அவர் ஓர் அறிவியல் உண்மையைக்  கண்டறிந்தார்; உடனே, "கண்டுகொண்டேன், நான் கண்டு கொண்டேன்" என்னும் பொருள்படும் ‘யுரேகா! யுரேகா! (Eureka!)’ எனக் கூறியவாறே தெருவில் இறங்கி நிர்வாணமாக ஓடினார் என்பதே அந்நிகழ்வு. இந்நிகழ்ச்சி நடந்ததோ அல்லது கற்பனையோ, ஆனால் அவர் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது;

 அவ்வுண்மை இதுதான்: "ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு சமமான நீரை வெளியேற்றுகிறது".

Post a Comment

0 Comments