SSTA - சம வேலைக்கு சம ஊதியம் அரைநாள் நினைவூட்டல் கூட்டத்திற்கு சென்னையில் குவிந்த ஆசிரியர்கள்

       தமிழக அரசு பள்ளியில் பணிபுரியும் 2009 க்குப் பின் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையக்கோரி கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு  உணர்ச்சிமிகு போராட்டங்களை TET ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து SSTA இயக்கம்   நடத்தியதன்  காரணமாக தற்போதுள்ள தமிழக அரசு தனது  தேர்தல் வாக்குறுதியில்  எண்  311 இல் கூறியபடி சமவேலைக்கு  சம ஊதியம்  20,000 ஆசிரியர்களுக்கு  வழங்கப்படும் என்ற  வாக்குறுதியை  அரசுக்கு நினைவூட்டுவதற்காக 11. 09 .2022 ல் சென்னை  வள்ளுவர் கோட்டத்தில்  அரை நாள் கூட்டம்தான்  என்று  பார்க்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குவிந்து கூட்டத்தை சிறப்பு செய்தார்கள்.  

      இதில் பேசிய  ஒருங்கிணைப்பாளர் திரு இராபர்ட் அவர்கள்.  கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் கேட்கும் கோரிக்கை தவறு என்று நமக்கு இடையூறு செய்த மூத்த சங்கங்கள் எல்லாம் தற்போது தமிழக முதல்வர் முன்னிலையில் நமது கோரிக்கை நியாயம் , அதை நிறைவேற்றி தாருங்கள் எனக்கேட்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு நன்றி.

       மேலும்  இனி எங்கள் அடுத்த கூட்டம் சென்னையில் வெற்றிவிழா கூட்டமாகத்தான் இருக்க வேண்டும்.  அதை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.  மீண்டும் எங்களை  போராட்டத்திற்கு தள்ளினால் அது  எங்களுக்கும்,  தமிழக அரசுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.  வெற்றி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.  சமூக நீதியின் உருவமாய் இருக்கும் தற்போதைய தமிழக அரசிடம் கட்டாயம் எங்களது சமூகநீதி கோரிக்கையை வென்றே தீருவோம் என உறுதியாகக்கூறினார்.  


Post a Comment

0 Comments