கல்வித்தொலைக்காட்சி (KALVI TV) மாணவர் பார்வையிடல் கண்காணிப்பு அட்டவணை


நிகழ்ச்சி அட்டவணை PDF




     நடப்பு கல்வியாண்டுக்கான பணிகள் பள்ளிகளில் துவங்கிவிட்டன. இருப்பினும், வழக்கம்போல், வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்கும் சூழல் இதுவரை இல்லை. குறிப்பாக, துவக்கப்பள்ளியில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் தாமதமாக, வாய்ப்புகள் அதிகம்.


இவர்கள் கல்வி தொலைக்காட்சி வழியே வீட்டில் இருந்தே பாடங்கள் கற்கும் வகையில், அட்டவணை ஒன்றை தயாரித்து, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை வினியோகித்துளளது. இத்துடன், பெற்றோருக்கான மாணவர் கண்காணிப்பு படிவமும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தவறாமல் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதை, உடனிருந்து உறுதி செய்து அப்படிவத்தில் தேதி வாரியாக கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியருக்கு அனுப்ப வேண்டும்.


செப்டம்பர் மாதம் வரை 'ஆன்லைன்' தான்

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜூலை 23ம் தேதியில் இருந்து வகுப்புகள் துவங்குகின்றன. முதல் வகுப்பிற்கு - மதியம் 1:00 மணி; 2ம் வகுப்பிற்கு - மாலை, 5:00 மணி; 3ம் வகுப்பிற்கு - மாலை, 5:30 மணி; 4ம் வகுப்பு - மாலை, 6:00 மணி; 5ம் வகுப்பு - மாலை, 6:00 - 7:00 மணி என வகுப்புகள் நடக்கும். ஐந்தாம் வகுப்பு தவிர பிற வகுப்புக்கு அரை மணி நேரம் மட்டுமே கற்பிக்கப்படும்.


திங்கள் - தமிழ்; செவ்வாய் - ஆங்கிலம்; புதன் - கணக்கு; வியாழன் - 2ம் வகுப்பு வரை சூழ்நிலையியல், பிற வகுப்புகளுக்கு - அறிவியல், வெள்ளி - 2ம் வகுப்பு வரை பேசும் ஓவியம்; மற்ற வகுப்புகளுக்கு - சமூக அறிவியல் பாடங்கள் ஒளிபரப்பாக உள்ளன. செப்டம்பர் வரை இக்கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments