தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல் (குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகள்) உள்ள 2,327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2 A பணியிடங்கள் என்று 2,327 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு : குரூப் 2 மற்றும் குரூப் 2a பணிகளுக்கு விண்ணப்பிப்பது வயதுவரம்பானது 01.07.2024 தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக இதில் பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற பிரிவினர் 42-க்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்பது 01.07.2024 அன்றோ அல்லது தெரிவு செய்யப்படும் நாளன்றோ அல்லது நியமனம் செய்யப்படும் நாளன்றோ தேர்வர் 60 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. மேலும் அதிகபட்ச வயது வரம்பு துணை வணிகவரி அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு பொருந்தாது.
கல்வி தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரையில் தேர்வர்களுக்கு ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வி தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என TNPSC அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தேர்வு செய்யப்படும் முறை: தேர்வர்கள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வனவர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100. முதல்நிலைத் தேர்வு கட்டணமும், ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணமும், ரூ.150. இ தனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்..
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பிக்க கடைசி நாள் : TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். என தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வரும் 19.07.2024 அன்றுடன் கடைசி தேதி ஆகும். மேலும் முதல் நிலைத் தேர்வு 14.09.2024 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.