நீட் (NEET-2024) 7.5% vs 92.5%. இந்த ஆண்டு Cut-off எவ்வளவு எதிர்பார்க்கலாம்??

2024 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு  கடந்து  மே 5 ம் தேதி  நடைபெற்றது.

  நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கிற்கான கட் ஆஃப் மற்றும் 7.5% உள் இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு எவ்வளவு மார்க் இருந்தால் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்ற கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும்.

இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சலிங்கில் அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதையும், 7.5% உள் இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு எவ்வளவு மார்க் இருந்தால் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதையும் கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். 

அதன்படி, மாணவர்களின் கருத்துக்கள் படி, சென்ற ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கும், இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. 

( இந்த  முடிவு  கடந்த ஆண்டு கட்ஆப் அடிப்படையில் முற்றிலும்  அனுமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது) 

கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம்

பொதுப் பிரிவு – 602

பி.சி – 556

பி.சி.எம் – 541

எம்.பி.சி – 530

எஸ்.சி – 454

எஸ்.சி.ஏ – 382

எஸ்.டி – 355

இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் 

பொதுப் பிரிவு – 612

பி.சி – 569

பி.சி.எம் – 556

எம்.பி.சி – 547

எஸ்.சி – 475

எஸ்.சி.ஏ – 405

எஸ்.டி – 370

அரசுப் பள்ளியில் படித்து 7.5% உள் இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கான கட் ஆஃப் விவரம்

கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம்

பொதுப் பிரிவு – 402

பி.சி – 357

பி.சி.எம் – 345

எம்.பி.சி – 368

எஸ்.சி – 337

எஸ்.சி.ஏ – 340

எஸ்.டி – 328

இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் 

பொதுப் பிரிவு – 430

பி.சி – 400

பி.சி.எம் – 375

எம்.பி.சி – 400

எஸ்.சி – 365

எஸ்.சி.ஏ – 375

எஸ்.டி – 360

Post a Comment

0 Comments