தினம் ஒரு கதை - வழிகாட்டி

வழிகாட்டி 

.......................................

         சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை,   குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு அதிகமாக பயன்பட்டது. 


    அப்படி குதிரை வண்டியில் பள்ளிக்குச் செல்வது ஒரு சிறுவனின் வழக்கம். ஒருமுறை வகுப்பில் நீங்கள் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு என்னவாக ஆக வேண்டும்? என ஆசைப்படுகிறீர்கள் என ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்.


     வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என பலரும் பதிலளித்தனர். ஆனால், இந்த மாணவனோ, நான் குதிரை வண்டிக்காரன் ஆவேன், என்றான். வகுப்பில் அனைத்து மாணவர்களும் கிண்டலாக சிரித்தனர். ஆசிரியரும் கிண்டலாக சிரித்துவிட்டு, அவனை அமர சொன்னார்.


     சிறுவன் அன்று மாலை வேகமாக வீட்டிற்கு வந்து, பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் கூறினான். அம்மாவுக்கு மகன் மீது கோபம் வரவில்லை. நீ ஏன் குதிரை வண்டிக்காரன் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறாய்? என கேட்டார்.


     தினமும் நான் பள்ளிக்குச் செல்லும் பொழுது, குதிரை வண்டிக்காரர் மிகவும் அழகாக வண்டி ஓட்டுவதை பார்த்து, எனக்கும் அவ்வாறு குதிரை வண்டி ஓட்டும் ஆசை வந்துவிட்டது, என சிறுவன் கூறினான்.


       அம்மா பூஜை அறைக்கு சென்று, மகாபாரத ஓவியத்தை எடுத்து வந்தார். அதை மகனிடம் காட்டி, நீ குதிரை வண்டி க்காரராக வேண்டும் என்று சொன்னது தவறு இல்லை. ஆனால், நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்ட வேண்டும் தெரியுமா? என கேட்டார்.


      மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண பகவான் போல தேரோட்டியாக இருக்க வேண்டும் என்றார்.


        நல்ல வழிகாட்டியை தேர்வு செய்வது எப்படி? என அம்மாவிடம் கற்றுக் கொண்ட அந்த சிறுவன் தான், இந்தியாவின் பெருமையை, உலகுக்கு எடுத்துச் சென்ற சாமி விவேகானந்தர்.


     நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், என்ன இலக்கு வைத்திருந்தாலும் உங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டி தேவை. 


      நல்ல வழிகாட்டி எப்படி இருப்பார் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

Post a Comment

0 Comments