வங்கிகளில் உள்ள நடைமுறை போலவே அரசூழியர் ஆசிரியர்களின் மாத ஊதியத்திலிருந்து வருமானவரி முன்பணம் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி IFHRMS ல் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்!
தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்

வழக்கமாக தனக்கான வருமான வரியை ஊழியரே தோராயமாக முடிவு செய்து மாதந்தோறும் பிடித்தம் செய்ய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரிடம் தெரிவிப்பர். பலர் பிடித்தமே செய்யாது டிசம்பர், ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் மட்டும் பிடித்தம் செய்வர். சிலர் ஊதியத்திற்குமேல் வரி வரும் சூழலில் தனியாக Online / வங்கி செலான் மூலம் பிப்ரவரியில் வரி செலுத்துவர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வருமான வரியை வசூலித்துக் கட்டவும், இறுதி நேரத்தில் ஊழியர் தனியாக Online / வங்கி செலான் மூலம் கட்டுவதைத் தவிர்க்கவும் வேண்டுமென கண்டிப்பான முறையில் வருமானவரித்துறை கருவூலகங்களை அறிவுறுத்தி வருகிறது. இதைப் பின்பற்றாத ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிக்கல்களை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு, வரும் வரியாண்டு முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமானவரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழ்நாடு அரசின் IFHRMS (களஞ்சியம்)ல் நடைமுறைக்கு வர உள்ளது.

இதன்படி, வரும் ஆண்டிற்கான ஆண்டு மொத்த ஊதியத்தை வைத்து ஊழியருக்கான வருமான வரி எவ்வளவு என்பதைத் தோராயமாக IFHRMS (களஞ்சியம்) மென்பொருளே கணக்கீடு செய்து அதிலிருந்து மாதாந்திரத் தவணையை மதிப்பிட்டு மாதந்தோறும் தானாகவே பிடித்தம் செய்துவிடும். ஊதிய உயர்வு & அகவிலைப்படி உயர்வின் போதும் அதற்கேற்ப வரியில் மாற்றம் ஏற்படும்.

அதன் முதல்படியாக, ஊழியர்கள் தாங்கள் எம்முறையில் (OLD / NEW) வரிக் கணக்கீடு செய்ய உள்ளனர் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து தங்களது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்குத் தெரியப்படுத்தி உரிய தரவுகளை மார்ச் 10ஆம் தேதிக்குள் IFHRMSல் பதிவேற்ற வேண்டும் என்று கருவூலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தமுறையில் என்று தெரிவிக்கவில்லை எனில், தானாகவே New Regime முறையில் வரி கணக்கிடப்படும். 

டிசம்பர் மாதத்தில் இதில் வரித் திருத்தங்களில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பழைய வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்களது வரித்தளர்வு தொடர்பான சேமிப்புகளை இந்த வாரத்திலேயே (தோராயமாகக்) கணக்கிட்டு முடிவு செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் மற்றொரு வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளும் வசதி. DDO LOGIN ல் வழங்கப்பட்டுள்ளது  , இறுதி மாதங்களில் வரித்தளர்வுகளில் தேவையான கூடுதல் திருத்தங்களைச் செய்து கொள்ளும் வசதி உள்ளதா என்பதும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தபின்னர்தான் தெரியவரும்.

வங்கிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இந்நடைமுறைதான் உள்ளது. வரி விதிப்பு முறையை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதேநேரம் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / கடன்கள் / கல்விச் செலவுகள் தொடர்பான அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பித்தாக வேண்டிய நிலையும் அங்கு உள்ளது. அவர்களுக்குத் தனியே IT படிவம் தயார் செய்து அளிக்க வேண்டிய தேவையுமில்லை. அந்த மென்பொருள் மூலமே Form 16A & 16B என அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தமது Login மூலம் இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய முழுமையான வசதி IFHRMS (களஞ்சியம்)ல் இருக்குமா என்பது திட்ட செயலாக்கத்திற்குப் பின்பே தெரியவரும். இவையெல்லாம் இருக்குமெனில், Audit Consultancy மூலம் TDS & Form16 பணியை மேற்கொள்ள ஊழியர்களிடமிருந்து தனியே பணம் வசூல் செய்யப்படுவது முற்றுப்பெறும்.

நினைவில் கொள்க.

Form 16Aல் மாதந்தோறும் & காலாண்டு வாரியாகப் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி தொடர்பான விபரங்கள் இருக்கும்.

Form 16Bல் ஓராண்டிற்கான ஊதியத்திற்கு எவ்வாறு வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற முழுமையான விபரம் இருக்கும். அதாவது நாமளிக்கு IT படிவத்தின் அனைத்துத் தரவுகளும் இதில் இருக்கும்.

நாம் தயாரித்து அலுவலகத்தில் அளிக்கும் IT படிவம் என்பது ஒரு மாதிரி தான். அது நமது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலகத்தைத் தவிர்த்து வேறெங்கும் எந்தவகையிலும் பயன்படாது / பொருட்படுத்தப்படாது. இப்படிவத்தை அடிப்படையாக வைத்து IT Web Pageல் TDS செய்யும் போது, TRACES எனப்படும் இந்திய வருமான வரித்துறையின் TDS Reconciliation Analysis and Correction Enabling System மூலம் தரவிறக்கப்பட்டு வழங்கப்படும் Form 16B தான் அதிகாரப்பூர்வ IT படிவம். வங்கிகளில் கடன் கோரும்போதும், வருமான வரி தொடர்பான இதர பயன்பாடுகளுக்கும் இந்த Form 16Bயைத்தான் கேட்பர்.


மொபைல் மூலம்  kalanjiyam app ல் வருமான வரி முறையை தேர்வு செய்ய 

👉 Install --- KlanjiyamApp

👉 Input IFHRM number 

👉Input OTP

👉Set 4 digit possword 

👉Click next 

👉 Click income-tax option 

👉Select Old /New method 

👉 Save. 

பின்னர்  IFHRM - KALANJIYAM website ல் சென்று  Declaration கொடுக்க வேண்டும்.  


Post a Comment

0 Comments