CPS இல் செலுத்திய தொகையை வருமான வரி படிவத்தில் 80C இல் 1,50,000 வரை கழிக்கலாம் 80CCD(1B) பிரிவில் 50 ஆயிரம் வரை கழிக்கலாம்- மாநில வருமான வரி அலுவலரின் கடிதம்.
CPS இல் செலுத்திய தொகையை வருமான வரி படிவத்தில் 80C இல் 1,50,000 வரை கழிக்கலாம் 80CCD(1B) பிரிவில் 50 ஆயிரம் வரை கழிக்கலாம்- மாநில வருமான வரி அலுவலரின் ( 29.03.2017 ) கடிதம்.
வருமானவரி IT சார்பான விளக்கம்
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கீட்டு படிவம் தற்போது அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களிலும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
அதில் ஒரு சில வட்டார கல்வி அலுவலர்கள் சிபிஎஸ் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80 சிசிடி 1 (B) பி யில் கூடுதலாக ரூபாய் 50,000 பிடித்தம் செய்யக்கூடாது என வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார்கள்
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட அமைப்பின் கவனத்திற்கு வந்தவுடன்
உடனடியாக திருநெல்வேலி வருமான வரித்துறையின் ஆய்வாளர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசப்பட்டது.
மேலும் 29.03.2017 ஆம் ஆண்டு பைனான்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து வெளியிடப்பட்ட விளக்க கடிதமும் அனுப்பப்பட்டது.
உடனடியாக திருநெல்வேலி வருமானவரித்துறை ஆய்வாளர் அவர்கள் வருமான வரியில் CPS திட்டத்தில் உள்ளவர்கள் 80CCD 1 b யில் கூடுதலாக ரூ.50,000/- கழித்தம் செய்து கொள்ளலாம் எனவும் விளக்கம் கூறினார்கள்.
எனவே இதையும் மீறி ஏதாவது வட்டார கல்வி அலுவலர்கள் பிடித்தம் செய்யக்கூடாது என்று சொன்னால் எழுத்துப்பூர்வமாக ஆணையினை வழங்கும்படி அந்தந்த வட்டார பொறுப்பாளர்கள் BEO க்களிடம் பேசும்படி மாவட்ட கிளை சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.