நேர மேலாண்மை
.......................................
ஒரு சமயம் ஒரு காட்டில் அனைத்து மிருகங்களும் ஆலோசனைக்காக ஒன்று கூடின. அப்பொழுது ஒவ்வொரு மிருகமும், தன்னிடமிருந்து மனிதன் அதை எடுத்துக் கொள்கிறான், இதை எடுத்துக் கொள்கிறான் என புகார் கூறிக் கொண்டிருந்தன.
தன்னிடமிருந்து பாலை எடுத்துக் கொள்வதாக பசுவும், முட்டை எடுத்துக் கொள்வதாக கோழியும், தன்னுடைய சதைகளை தின்பதாக பன்றியும், என்னுடைய எண்ணையை எடுத்துக் கொள்கிறான் என திமிங்கலமும் பட்டியல் இட்டன.
இதில் கடைசியாக நத்தை பேசியது. என்னிடம் உள்ள ஒரு விஷயத்தை, உலகிலேயே மிகவும் தேவையென கருதும் மனிதன் முடிந்தால் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் முடியவில்லை, என்றது. அதாவது அது கூறியது நேரத்தை பற்றி.
மனிதனுக்கு மிக அத்தியாவசியமான தேவை நேரம். நம்மிடம் இருக்கும் அனைத்து சொத்துக்களிலும் மேலானது நேரம். அதை மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கவும் முடியாது. கடன் கொடுக்கவும் முடியாது.
உங்களின் வாழ்க்கையை முழுமையாக செயல்படுத்த விரும்பினால், உங்களுடைய நேரத்தையும், ஒழுக்கத்தையும் நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்தும் அளவு உங்களுக்கு தெரிந்தால், உங்களுடைய வேலையும், களைப்பாறும் நேரத்தையும் சமமாக நீங்கள் அனுபவிக்க முடியும்.
இங்கு ஒழுக்கம் என்பது நேரம் மேலாண்மையில் நமது பங்கினை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதே!
அதாவது நமக்கு தெரிந்த செயல்களை தள்ளிப் போடாமல், உடனடியாக செய்வது மற்றும் தெரியாத செயல்களுக்கான முயற்சி எடுப்பது.
அப்போது இரண்டுமே நமக்கு ஆனந்தத்தை அளிக்க வல்லதாக மாறிவிடும்.
நமக்கு தெரியாத செயல்களை, ஆய்வு செய்து அந்த செயலை முடிக்கும் தருணத்தில், நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உலகத்தில் எந்த மகிழ்ச்சியை விட, மிகவும் மேலான விஷயம்.
நீங்கள் செலவு செய்யும் நேரம் உங்களுடையது. அந்த நேரத்தை, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோமானால், நீங்கள் வெற்றியின் பாதையை நெருங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.