"உழைப்புக்கு முதல் மரியாதை."

 "உழைப்புக்கு முதல் மரியாதை.".. .

.......................................

  உழைப்புக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதோடு எப்போதும் உழைப்பதற்குத் தயக்கம் காட்டாதீர்கள.. உண்ணும் உணவில் வியர்வையின் சுவையும் கலக்க வேண்டும்.. 

    துறவி ஒருவர் ஓர் ஊருக்கு வந்தார். அந்த ஊரில் இருந்த மிகப்பெரிய பணக்காரர். இவர் ஏழைகளை கசக்கி பிழிந்து கோடி கோடியாக சொத்துக்கள் சம்பாதித்தவர்.. 


    துறவிக்கு அறுசுவை உணவு கொடுத்தார். அதுபோலவே ஓர் ஏழை விவசாயி பழைய சோற்றுக் கஞ்சியை கொண்டு வந்து கொடுத்தார்.. 


      துறவி விவசாயியின் கஞ்சியை குடிக்க ஆரம்பித்து விட்டார்.. அதைப்பார்த்த பணக்காரர் ,"அய்யா நான் கொண்டு வந்த அறுசுவை உணவை ஏன் எடுத்துக் கொள்ள வில்லை"என்று வினவினார்.. துறவி அமைதியாக விவசாயியின் ஒரு சோற்றுப்பருக்கையை எடுத்து பிழிந்தாராம்.. அதில் இருந்து பால் கொட்டியதாம்.


      அதைப்போல பணக்காரரின் உணவை பிழிந்தாராம்.. அதில் இருந்து இரத்தம் கொட்டியதாம்.. இதைப் பார்த்த பணக்காரருக்கு அதிர்ச்சி..


       பணக்காரரை பார்த்து துறவி," நீ பிறரை ஏமாற்றி சேர்த்த பணத்தால் தயாரிக்கப்பட்ட உணவில் இருந்து இரத்தம் கொட்டியது..


   ஆனால் விவசாயி தன் உழைப்பில் கிடைத்த உணவில் செய்த சோற்றில் இருந்து பால் கொட்டியது..உழைப்பும்,நேர்மையும் இல்லாத பணத்தில் செய்த உணவை நான் எப்படி சாப்பிடுவது என்றாராம்..                             

                                             

     நமது உழைப்பில் உண்மையும், நேர்மையும் இருக்க வேண்டும்..உழைக்கும் போதுதான் உயர்வு பிறக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்...

Post a Comment

0 Comments