நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிவித்தது இந்தியத்தேர்தல் ஆணையம்..!

*"நாடாளுமன்றத் தேர்தல் -2024"* 
*நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிவித்தது இந்திய* *தேர்தல் ஆணையம்..!* 

*2024*-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் *96.88* கோடி பேர் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் - *49.7* கோடி பேர்.

பெண் வாக்காளர்கள் - *47.1* கோடி பேர்.

மூன்றாம் பாலினத்தவர்கள் - *48,044* பேர்.

மாற்றுத்திறனாளிகள் - *88.35* லட்சம் பேர்.

புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை - *2.63* கோடி உயர்வு.

புதிய வாக்காளர்களில் பெண்கள் மட்டும் *1.41* கோடி பேர்.

*17* வயது நிறைவடைந்தவுடன் பதிவு செய்தவர்கள் *10.64* லட்சம் பேர்.

மேலும், கடந்த *2019*-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்காளர்களை விட, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் *6%* வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments