NMMS -தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை ( Hall Ticket ) 24.01.2024 ( புதன்கிழமை ) பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது


அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) பிப்ரவரி 2024 பெயர்ப்பட்டியலுடன் - தேர்வுமைய கூடிய வருகை தாட்கள் ( Nominal Roll Cum Attendance Sheet ) மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் ( Hall Ticket ) பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக 2023 2024 - ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 03.02.2024 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் ( Nominal Roll Cum Attendance Sheet ) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.01.2024 ( புதன் கிழமை ) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . எனவே , ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தேர்வுகூட நுழைவுச்சீட்டு : மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை ( Hall Ticket ) 24.01.2024 ( புதன்கிழமை ) பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID / Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும் , தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments