தினம் ஒரு கதை -ஆபத்தில் உதவிய நண்பர்களை என்றும் மறக்கக்கூடாது

 யானைக்குட்டியும் நணபர்களும்.   


குறும்புக்கார யானைகுட்டிக்கு தான் மற்றவர்களிலும் பார்க்க பெரியவன் என்ற கர்வம். எல்லோரையும் ஏளனமாகப் பார்க்கும். கர்வம் காரணமாக யானைக்குட்டி தனியாக அங்கும் இங்கும் சென்று வந்தது.


தாய் யானை தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று குட்டியானைக்கு சொல்லியது.


ஒரு நாள் காகம் அடைவதற்காக மரக்கிளையில் கூடு ஒன்றை கட்டிக் கொண்டு இருந்தது. அவ்வழியாக தனியாக வந்த குறும்புக்கார யானைக்குட்டி அதைக் கண்டது. தனது தும்பிக்கையினால் மரக்கிளையினை முறித்தது. காகத்தின் கூடு கீழே விழுந்தது. காகம் கவலையுடன் பறந்து சென்றது.


யானைக் குட்டி கவலையுடன் சென்ற காகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்டது. குரங்குக் குட்டியையும் விரட்டியது. குரங்கு மரத்திற்கு மரம் தாவித் தப்பியது. இப்படியாக பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்து அதில் மகிழ்ச்சி கண்டது யானைக் குட்டி.


மரத்தில் இருந்து பழங்களைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அணிலை மரத்தினை ஆட்டிப் பயம் காட்டியது. அணில் பயத்தில் கீழே விழுந்து ஓடியது. யானைக்குட்டியின் இந்த செயல் கண்டு எல்லா மிருகங்களும் யானைக்குட்டியை விட்டு விலகிச் சென்றன.ஒருநாள் யானைக்குட்டி குளத்தில் இறங்கி நீராடியது. தண்ணீரில் துள்ளி குதித்து விளையாடியது. அப்பொழுது யானைக் குட்டியின் கால் சேற்றில் புதைய தொடங்கியது. யானைக் குட்டியால் காலை வெளியில் இழுக்க முடிய வில்லை. யானைக் குட்டி சத்தமாக பிளிறியது.


குச்சிகளைச் சேகரித்துக் கொண்டிருந்த காகத்திற்கு யானைக் குட்டி பிளிறுவது கேட்டது.


பிளிறும் யானை சத்தம் வந்த திசையை நோக்கி விரைவாகச் சென்றது.


யானைக்குட்டி சேற்றில் புதைத்திருப்பதை கண்ட காகம் குரங்கினது உதவியுடன் கயிறு கொண்டு யானையை இழுத்தது. இழுக்க முடியவில்லை. என்ன செய்வது என்று காகம் யோசித்தது.


மீண்டும் விரைவாகப் பறந்து சென்றது. யானைக்குட்டியின் அம்மாவை அழைத்து வந்தது. அம்மா யானை தும்பிக்கையால் குட்டியானையைத் தூக்கி வெளியில் எடுத்தது.


பயத்தினால் யானைக்குட்டி அம்மாவினை அணைத்துக்கொண்டது. அம்மா யானை எல்லோருடனும் நட்புடன் பழக வேண்டும்.


ஆபத்தில் உதவிய நண்பர்களை என்றும் மறக்கக்கூடாது என்று சொல்லியது. அதனை கேட்டு குறும்புக்கார யானைக்குட்டி தன்னுடைய முதுகில் தனது நண்பர்களை ஏற்றிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றது.

Post a Comment

0 Comments