வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு(NMMS EXAM) -03.02.2023 . OFFLINE விண்ணப்பங்களை 04.12. 2023 முதல் 19 12 2023 க்குள் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க அரசு தேர்வு துறை அறிவிப்பு இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்

2023 - 24 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.


இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இத்துறையின் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் வழியாக பள்ளிகள் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய வழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூபாய் 50 சேர்த்து மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 19 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது

- அரசு தேர்வுகள் இயக்ககம்.


APPLICATION PDF DOWNLOAD CLICK HERE





Post a Comment

0 Comments