தேசிய வருவாய் வழி திறனாய்வு உதவித்தொகை (NMMS) தேர்வு: offline விண்ணப்பிக்க கடைசிநாள்: 19-12-2023

தேசிய வருவாய் வழி திறனாய்வு உதவித்தொகை (NMMS) தேர்வு: 

விண்ணப்பிக்க கடைசிநாள்: 19-12-2023


ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2023-2024-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2024 பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 04.12.2023 முதல் 19.12.2023 வரை இத்துறையின் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் என்.எம்.எம்.எஸ்., (NMMS - National Means cum Metric Scholarship) எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆனது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்.

இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தகுதி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க, ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சம் இருப்பதுடன்,  ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம். 

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.48 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறமுடியும். பணம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 

ஆண்டுதோறும் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தேர்வு முடிவுகளானது வருடந்தோரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.

தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது எப்படி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, என்எம்எம்எஸ் தேர்வு குறித்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித்துறை எடுத்துவருகிறது. 

பாடதிட்டம்:

முந்தைய வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள், இந்தத் தேர்வில் இடம்பெறும். 

90 மதிப்பெண்ணிற்கு மனத்திறன் தேர்வு, 90 மதிப்பெண்ணிற்கு படிப்பறிவு திறன் தேர்வு என 2 வகையான தேர்வுகள் நடந்தப்படும்.

எட்டாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் விபரங்களைக்கு:


Post a Comment

0 Comments