தினம் ஒரு கதை - காக்கை & புளியமரம் உரையாடல்

 காக்கை & புளியமரம் உரையாடல் 


ஒரு புளியமரமும் காகமும் நண்பர்களாக இருந்தாங்களாம். ஒரு நாள் காக்கா கேட்டுதாம் ஒரே இடத்திலயே இருக்கியே அம்மா வீட்டுக்கு போற ஆசைலாம் இல்லையானு கேட்டுதாம்.


புளியமரமும் இப்பத்தான் 

என்கிளைகள் கோடைமுடிந்து இளந்துளிர் விட்டு இருக்கு இலைகளாகட்டும் என கூறியதாம்


இலைகள் அனைத்தும்

இளம்பசுமைப்போர்த்து கண்ணுக்கழகாக அடர்வண்ண பச்சையை போர்த்திக்கொண்டு அழகா நின்றதாம்.


இலைகளெல்லாம் முழுவதுமாக வியாபித்துடுச்சே இப்போ போகலாம்ல எனக்கேட்டுதாம் காகமும்.


மஞ்சள்வண்ணத்துல பூக்கள் பூக்க ஆரம்பிச்சிடுச்சு போகமுடியாதேனு சொல்லிச்சாம் புளியமரமும்.


சரினு காகமும் அமைதியா இருந்ததாம். மரம் முழுவதும் பூத்து முடிந்த பின்ன போகும்னு நினைச்சுகிட்டதாம்.


பூக்கள்லாம் மலர்ந்து சின்ன சின்ன சுண்டைகாய்களா காய்க்க தொடங்கியதாம் மரம் முழுவதுமாக.


அதா காய்கள் கூட வந்துடுச்சே அம்மா வீட்டுக்கு போகலையானு காகம் கேட்டதாம்.


சுண்டகாய்லாம் பெரிசாகட்டும் அப்பறமா போறேனு சொல்லுச்சாம் புளியமரம்.


புளியங்காயும் பெருசாகி கூங்காய்நிலைலஆகி மரம் முழுவதுமா காய்த்து தொங்கியதாம்‌‌.


காகமும் விடாம காய்ங்களாதான் காய்த்துவிட்டதே. பாரமா இருந்தாலும் ஒரு எட்டு அம்மா வீட்டுக்கு போகலாம்ல

எனக்கேட்டுதாம் காகமும்.


பழமாகட்டும் நா போறேன்னு புளியமரம் சொல்லிடுச்சாம்.


பழமும் காய்ந்து ஓடுகளும் வெளுத்து மரம் முழுவதுமாக பச்சை‌ இலைகளாக‌ பார்க்க அழகா இருந்ததாம்.


பழங்களும் தா பழுத்துட்டதே போகலாம்ல  எனக் கேட்டுதாம் காகமும்.


புளியம் பழம் வேண்டி உலுக்கிவிட வரவங்க வந்தா நா இல்லைனா ஏமாந்து

போவாங்க. அதுவரை நா காத்திருக்கேன்னு சொல்லுச்சாம்.


புளியம்பழம் அத்தனையும் உலுக்கி ஆறு மூட்டைகளாக அனைத்தையும் கொண்டு போனாங்களாம் உரிமையாளரும்.


அதா எல்லாபணியும் முடிந்ததே

இப்பவாவது போகலாம்ல என காகம் கேட்டு தாம்.


கோடை மழை வரும். சத்துகள் தேவைப்படும் வேர்களுக்கு. நாபோயிட்டா எப்படி? கோடைகாலம் முடியட்டும்னு சொல்லுச்சாம் புளியமரம்.


மழையும் பெய்ததாம் இலைகளும் அனைத்தும் உதிர்ந்ததாம்..


இலை கொட்டிபோய் வெறும் கிளையாக இருக்கியே இப்பவாவது போகலாம்னு என காகம்கேட்டுதாம் புளியமரத்திடம்.


இளம்தளிர்கள் வரும். அதை

வரவேற்கனுமே என அன்பை விட இயலாத ஆதங்கத்தோட காகத்தை பார்த்து கூறிவிட்டு அதே இடத்தில் நிலையாக நின்று அனைத்து பறவைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து மகிழ்ந்து வாசம் செய்ததாம்.


அந்த இடத்தின் பெருமைகளை பறைசாற்றிக்கொண்டு.


(புகுந்த வீட்டு பெருமைகள் தான் எனினும் பெண்களாக நினைத்தால் மட்டும் அந்த இல்லம் சுபிட்சம் பெறும்.)


நீதி: பெண்களின் மனநிலை புரிந்தவர்கள். புரியாதவர்களுக்கு புரியவைக்க ஒரு நீதிகதை.

Post a Comment

0 Comments